வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி இருட்டு கடை அல்வா

Photo of Tirunelveli Irutu kadai Halwa by Fathima Sujitha at BetterButter
506
0
0.0(0)
0

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா

Oct-05-2018
Fathima Sujitha
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா செய்முறை பற்றி

உலகம் புகழ் பெற்ற அல்வா என்றால் அது திருநெல்வேலி அல்வா தான் ... கோதுமை பால் சர்க்கரை சேர்ந்து முழுக்க முழுக்க நெய்யிலே குளித்து கலவையாக கிளு கிளுப்பான பதத்தில் வாய்யில் போட்டால் அப்படியே கரைந்து போகும் ... அதை சுவைதால் தான் அதன் அருமையே தெரியும் ...!!

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சம்பா கோதுமை - 200 கிராம்
  2. நெய் - 300 கிராம்
  3. சர்க்கரை - தேவையான அளவு
  4. முந்திரி - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு.
  2. கோதுமை ஊறிய பின்பு கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.
  3. கோதுமையை அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு வெண்மையான துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும்.
  4. அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம். ( தேங்காய் பால் எடுப்பது போல தான் ..)
  5. அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும்.
  6. பால் கொதித்து வரும்போது சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
  7. எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது.
  8. பாலும், சர்க்கரையும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும்.
  9. கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும்.
  10. ஒரு கரண்டியில் சிறிதளவு எடுத்து உருட்டி பார்த்தால் கையில் ஓட்டாமல் இருந்தால் அது தான் சரியான பதம்.
  11. அடுப்பை ஆஃப் செய்து, நெய்யில் பொறித்த முந்திரி சேர்த்து கிளறி வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  12. சுட சுட சுவையான திருநெல்வேலி இருட்டு கடை அல்வா தயார் ...!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்