வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி சொதி

Photo of Tirunelveli Sothi by Fathima Sujitha at BetterButter
390
0
0.0(0)
0

திருநெல்வேலி சொதி

Oct-07-2018
Fathima Sujitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி சொதி செய்முறை பற்றி

அல்வா விற்கு அடுத்த பிரபல உணவு திருநெல்வேலி சொதி தான் ...சொதியின் சிறப்பே காய்கறிகளை தேங்காய் பாலில் தக்காளி சேர்க்காமல் செய்வது தான் ...இதன் சுவையோ தனிதன்மை உடையது ..அது நீங்க சுவைத்து பார்த்தா தான் தெரியும்.. டிப்ஸ் பாருங்க செய்து உடனே சாப்பிடுங்க ...!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப் பருப்பு - 1/4 கப்
  2. நீளமாக வெட்டிய வெங்காயம் - 1
  3. பூண்டு - 5 பல்
  4. கேரட் - 1
  5. பீன்ஸ் - 5
  6. உருளைக் கிழங்கு - 1
  7. முருங்கைக் காய் - 1
  8. பச்சை பட்டாணி - சிறிதளவு (விரும்பினால்)
  9. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  10. தேங்காய் - 1/2 மூடி
  11. எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  12. கறிவேப்பில்லை - ஒரு கொத்து
  13. கொத்தமல்லி - சிறிதளவு
  14. உப்பு - தே.அ
  15. எண்ணெய் - தே.அ
  16. தாளிக்க :
  17. பட்டை - 1
  18. கிராம்பு - 3
  19. ஏலக்காய் - 2
  20. பிரிஞ்சி இலை - 1
  21. அரைக்க :
  22. இஞ்சி - சிறிதளவு
  23. பச்சை மிளகாய் -4

வழிமுறைகள்

  1. பாசிபருப்பை குக்கரில் ததண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. இஞ்சி பச்சை மிளகாய் நைஸாக அரைத்து கொள்ளவும்.
  3. தேங்காய் துருவி அரைத்து முதல் இரண்டாம் மூன்றாம் பாலை தனி தனியாக எடுத்து கொள்ளவும்.
  4. காய்கறிகளை ஒரே போல நடுத்தரமாக நீள வாக்கில் கட் செய்து கொள்ளவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை கிராம்பு ஏலக்காய் பிரஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பூடு சேர்த்து வதக்கவும்.
  7. காய்கறிகள் பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
  8. மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கிளறி மூன்றாவது தேங்காய் பால் சேர்த்து வேக விடவும்.
  9. முக்கால் பாகம் காய்கறிகள் வெந்ததும் இரண்டாம் தேங்காய் பால் சேர்க்கவும்.
  10. காய்கறிகள் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
  11. வேக வைத்த பாசி பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
  12. பச்சை வாசனை அடங்கியதும் 1ஆம் பால் சேர்த்து நுரை வரும் போது இறக்கவும்.
  13. சூடு சிறிது அடங்கியதும் எலுமிச்சை சாறு கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.
  14. சுவையான திருநெல்வேலி சொதி ரெடி...!!
  15. சுட சுட சாதத்தோடு திருநெல்வேலி சொதிய ஊற்றி சாப்பிட்டா அதன் ருசியே தனி தான் ...இடியாப்பாத்திற்கும் செம சைடிஸ் இது..!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்