வீடு / சமையல் குறிப்பு / அரைத்து வைத்த மசாலா நெய் மீன் குழம்பு (திண்டுக்கல் நாகையகோட்டை) ஸ்பெஷல்

Photo of Masala Fish Curry (Dindigul N.K.T.)Special by Bena Aafra at BetterButter
797
2
0.0(0)
0

அரைத்து வைத்த மசாலா நெய் மீன் குழம்பு (திண்டுக்கல் நாகையகோட்டை) ஸ்பெஷல்

Oct-07-2018
Bena Aafra
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரைத்து வைத்த மசாலா நெய் மீன் குழம்பு (திண்டுக்கல் நாகையகோட்டை) ஸ்பெஷல் செய்முறை பற்றி

திண்டுக்கல் மாவட்டம் நாகையகோட்டை பகுதியில் செய்யக்கூடிய ரெசிபீ

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நெய் மீன் -1/2கிலோ
  2. புளி-சிறிதளவு
  3. பூண்டு -6பல்
  4. மசாலா வதக்கி அரைக்க:::
  5. தக்காளி -2
  6. சின்னவெங்காயம்-1/4கிலோ
  7. கறிவேப்பிலை
  8. சீரகம் -1ஸ்பூன்
  9. ஓமம் -1ஸ்பூன்
  10. வரமிளகாய்-2
  11. எண்ணெய்
  12. விலக்கெண்ணெய்
  13. மிளகாய் தூள் -1/4ஸ்பூன்
  14. குழம்பு மிளகாய் தூள் -1/4ஸ்பூன்
  15. கடுகு -1/4ஸ்பூன்
  16. உளுத்தம் பருப்பு -1/4ஸ்பூன்
  17. வெந்தயம்-1/4ஸ்பூன்
  18. பச்சை மிளகாய் -1
  19. மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்
  20. தேங்காய் துருவல்

வழிமுறைகள்

  1. முதலில் நெய் மீனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  2. வதக்கி அரைக்க ::
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், ஓமம் சேர்க்கவும்.
  4. பொரிந்ததும் கறிவேப்பிலை வெங்காயம்,வரமிளகாய், சேர்த்து வதக்கவும்.
  5. சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
  7. ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் மற்றும் விலக்கெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்.
  9. உளுத்தம் பருப்பு ,வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாலிக்கவும்.
  10. பிறகு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  11. மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  12. நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
  13. உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.
  14. நன்றாக கொதித்ததும் தேங்காய் அரைத்து விழுதை சேர்க்கவும்.
  15. ஒரு கொதி கொதிக்க விட்டு நெய்மீன் சேர்க்கவும்.
  16. அடுப்பை நன்றாக சிம்மில் வைக்கவும்.
  17. பூண்டு பல்லை தட்டி சேர்க்கவும்.
  18. நன்றாக எண்ணெய் பிரியும் வரை வைத்து கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
  19. சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
  20. நெய் மீன் குழம்பு தயார். .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்