வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி அப்பளம்

Photo of Tirunelveli Kallidaikurichi Appalam by Fathima Sujitha at BetterButter
1403
0
0.0(0)
0

திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி அப்பளம்

Oct-08-2018
Fathima Sujitha
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி அப்பளம் செய்முறை பற்றி

கல்லிடைக்குறிச்சி அப்பளம் ருசிக்க முக்கிய காரணம் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் தான் ...!!!

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி அப்பளம் செய்ய :
  2. அரிசி மாவு - 1 கப்
  3. ஜவ்வரிசி மாவு - கால் கப்
  4. பச்சை மிளகாய் விழுது - 2 டீஷ்பூன்
  5. சீரகம் - 1டீஸ்பூன்
  6. உப்பு - தே.அ
  7. எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  9. தண்ணீர் - தே.அ

வழிமுறைகள்

  1. தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. அதில் அரிசி மாவு, ஜவ்வரிசி மாவு சேர்க்கவும்.
  3. அதனுடன் பச்சை மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும்.
  4. சீரகம், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
  5. சிறு உருண்டையாக எடுத்து அரிசி மாவு தொட்டு வட்டமாக தேய்த்து உலர வைக்கவும்.
  6. அப்பளம் ரெடி ஆன உடன் எண்ணெயில் ஒன்று ஒன்றாக பொரித்தெடுக்கவும்..
  7. மொறு மொறு னு அனைவரும் விரும்பும் கல்லிடைக்குறிச்சி அப்பளம் தயார் ..!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்