வீடு / சமையல் குறிப்பு / சேலம் தட்டுவடை செட்

Photo of Selam thattu Vadai set by Rachell Revathi Samuel at BetterButter
968
1
0.0(0)
0

சேலம் தட்டுவடை செட்

Oct-09-2018
Rachell Revathi Samuel
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சேலம் தட்டுவடை செட் செய்முறை பற்றி

சேலத்தில் மிகவும் பிரபலமான ரோட்டுக்கடை உணவு (Street food) இந்த தட்டு வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு 1/2 கப்
  2. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  3. கடலை பருப்பு 2 ஸ்பூன்
  4. சீரகம் 1/2 ஸ்பூன்
  5. பெருங்காயம் சிறிதளவு
  6. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க
  9. கேரட் 1
  10. சிறிய பீட்ரூட் 1
  11. கொத்தமல்லி தழை சிறிது
  12. வெங்காயம் 1
  13. மாங்காய் சட்னி செய்ய:மாங்காய் 1
  14. இஞ்சி சிறிய துண்டு
  15. பச்சை மிளகாய் 1
  16. தக்காளி சட்னி செய்ய:வெங்காயம் 1
  17. தக்காளி 1
  18. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  19. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை குறைந்த பட்சம் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து உளுத்தம்பருப்பை நன்றாக வறுத்து கொள்ளவும்.லேசாக நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.
  3. உளுத்தம்பருப்பு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  4. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து அரிசி மாவை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும். 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து வறுத்து எடுக்கவும்.
  6. வறுத்த மாவை பாத்திரத்தில் மாற்றி அதனுடன் ஊற வைத்த கடலை பருப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சீரகம் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  7. அரைத்த உளுத்தம் பருப்பையும் சேர்த்து கொள்ளவும்.
  8. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  9. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  10. ஒரு கவரில் எண்ணெய் தடவி எடுத்துக் கொள்ளவும்.
  11. கவரின் நடுவில் உருண்டையை வைத்து கொள்ளவும்.அதை கவரின் அடுத்த பகுதியால் மூடி கொள்ளவும்.
  12. ஒரு வட்டமான பாத்திரத்தை வைத்து அழுத்தி கொள்ளவும்.
  13. நன்றாக அழுத்தினால் வட்ட வடிவில் வரும்.
  14. அதே போல எல்லா உருண்டைகளை மும் செய்து கொள்ளவும்.
  15. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த தட்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
  16. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  17. பொரித்து எடுத்த தட்டைகள்
  18. மாங்காய் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.மாங்காய் சட்னி தயார்.
  19. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  20. ஆறியதும் வதக்கிய தக்காளி வெங்காயம் உடன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  21. தக்காளி சட்னி தயார்.
  22. ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பீட்ரூட்டை துருவி கொள்ளவும்.வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழையை நறுக்கி கொள்ளவும்.விருப்பப்பட்டால் துருவிய மாங்காய் சேர்த்து கொள்ளலாம்.
  23. 4 தட்டைகளை எடுத்து கொள்ளவும்.
  24. மாங்காய் சட்னி வைத்து கொள்ளவும்.
  25. துருவிய காய்கறிகளை வைக்கவும்.
  26. மற்றொரு தட்டையை எடுத்து அதில் தக்காளி சட்னி தடவி வைக்கவும்.
  27. தக்காளி சட்னி தடவிய தட்டைகளை வைத்து மூடவும்.சுவையான சேலம் தட்டுவடை செட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்