வீடு / சமையல் குறிப்பு / ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா

Photo of Srivilliputhur Palkova by Mallika Udayakumar at BetterButter
986
0
0.0(0)
0

ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா

Oct-09-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா செய்முறை பற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஊரில் கிடைக்கும் ஒரு இனிப்புப் பலகாரம். இதன் தனிச்சிறப்பு இதன் சுவையேயாகும். இங்குள்ள பசுக்களின் பால் தரும் ருசி இந்த இனிப்பின் தரத்தை உயர்த்துகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் இவ்வூரின் பசுக்களின் பால் சுவைமிக்கதாக இருக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தரமான பசும் பால்-1/2 லிட்டர்
  2. சர்க்கரை-50-75கிராம்
  3. நெய் -சிறிது

வழிமுறைகள்

  1. சுத்தமான பசும்பால் பார்த்து வாங்க வேண்டும் என்றால் பால்கோவா விற்கு நல்ல சுவை கொடுப்பது அது ஒன்று தான் மிக முக்கிய அம்சம்.
  2. ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அந்த பாத்திரத்தில் பாலை ஊற்றவும்.
  3. பாலை காய்ச்சிய பிறகும் அதனை கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கலக்கவும்.பிறகு அளந்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கொள்ளவும்.
  4. இதற்கு பொறுமை மிக அவசியம்.
  5. ஒரு தட்டில் நெய் சிறிதளவு எடுத்து கலந்து கொள்ளவும்
  6. இதில் கவனிக்க கூடிய விஷயம் என்ன வென்றால் தீ மிதமாக இருக்க வேண்டியது
  7. இப்படி கிட்டத்தட்ட கால் மணி நேரம் கலக்கி கொண்டே இருக்கும் போது தான் கெட்டியாகும்.
  8. நான் நான்ஸ்டிக் வாணலியை பயன்பாடுத்தியதால், அடுப்பில் தீயை சிறிது கூட்டி வைத்து கலக்கினாலும் அடிபிடிக்கவில்லை.
  9. பாலை கலக்கி கொண்டே இருக்கவும்
  10. பால் நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது தீயை இன்னும் குறைத்து விடவும். சுற்றிலும் படியும் பால் ஆடைகளை வழித்து பாலிலேயே போடவும். லேசான மஞ்சள் நிறத்தில் நல்ல வாசனை வரும் போது,
  11. சற்று தளர்ந்த நிலையில் இருக்கும்போது பால்கோவாவை அடுப்பிலிருந்து இறக்கி விடவேண்டும். ஆறியதும் இன்னும் இறுகும் என்பதால் அடுப்பிலேயே இறுக விட்டால் மிக கெட்டியாக ஆகிவிடும்.
  12. ஸ்ரீ வள்ளிபுத்தூர் பால்கோவா தயார்
  13. அரை லிட்டர் பாலில் கிட்டத்தட்ட கால்(1/4கிலோ) பால்கோவா கிடைக்கும்
  14. நீங்களும் இதனை செய்து அசத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்