வீடு / சமையல் குறிப்பு / கொங்குநாடு ஆட்டுக்கறி குருமா

Photo of Kongu Nadu Mutton Kurma by Jayanthy Asokan at BetterButter
676
0
0.0(0)
0

கொங்குநாடு ஆட்டுக்கறி குருமா

Oct-09-2018
Jayanthy Asokan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொங்குநாடு ஆட்டுக்கறி குருமா செய்முறை பற்றி

கொங்குநாடு ஆட்டுக்கறி குருமா செய்வதற்கு அம்மியில் மசாலா பொருட்களை கொண்டு அழைப்பதே அதன் தனிச்சிறப்பாகும். மண் சட்டியில் செய்யும்பொழுது அதன் சுவை கூடும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டுக்கறி 1/2 கிலோ
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி-3
  4. என்னை 3 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  6. உப்பு தேவைக்கு ஏற்ப
  7. கொத்துமல்லி தழை ஒரு கைப்பிடி
  8. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  9. மசாலா பொருட்கள் அரைப்பதற்கு
  10. பச்சை மிளகாய் 7
  11. இஞ்சி 1/2 இன்ச்
  12. வெள்ளைப் பூண்டு 5 பற்கள்
  13. லவங்கம் 4
  14. பட்டை 1 இன்ச்
  15. சோம்பு 1 தேக்கரண்டி
  16. வெங்காயம் நறுக்கியது 1/2
  17. துருவிய தேங்காய் 1 கப்
  18. வருத்த தனியா 3 மேஜைக்கரண்டி
  19. தண்ணீர் 5 கப்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பச்சை மிளகாயை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
  2. அரைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களுடன் (தேங்காய் மற்றும் தனியா தவிர)இந்த பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. அரைத்த விழுதை தனியே வைக்க வேண்டும்
  4. பச்சைமிளகாய் வறுத்த வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியாவை வறுத்துக் கொள்ள வேண்டும்
  5. வறுத்த தனியாவை தேங்காயுடன் வைத்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்
  6. அரைத்த விழுதை தனியே வைக்க வேண்டும்
  7. ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைக்க வேண்டும்
  8. எண்ணை காய்ந்ததும் அதில் அரிந்த வெங்காயத்தை இட்டு வதக்க வேண்டும்
  9. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
  10. நன்கு வதங்கியபின் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
  11. தக்காளி நன்கு வதங்கியவுடன் நன்கு கழுவி வைத்த ஆட்டுக்கறியை சேர்க்கவேண்டும்
  12. ஆட்டுக்கறி சேர்த்து மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்
  13. 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்
  14. மண் சட்டியை மூடி கொண்டு மூடி 30 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்
  15. பத்து நிமிடங்களுக்கு ஒரு தரம் கிளறி விட வேண்டும்
  16. ஆட்டுக்கறி நன்கு வெந்த பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்
  17. ஐந்து நிமிடம் கொதித்தவுடன் மல்லித்தழை கறிவேப்பிலை தூவி இறக்கி வைக்க வேண்டும்
  18. கொங்குநாடு ஆட்டுக்கறி குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்