வீடு / சமையல் குறிப்பு / சென்னை பேமஸ் நெய் சோறு

Photo of Chennai  famous  ghee rice by hajirasheed haroon at BetterButter
666
1
0.0(0)
0

சென்னை பேமஸ் நெய் சோறு

Oct-09-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சென்னை பேமஸ் நெய் சோறு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பாஸ்மதி அரிசி ஒரு கிலோ
  2. வெங்காயம் அரை கிலோ
  3. தக்காளி கால் கிலோ
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 4
  6. புதினா மல்லி இலை 1 கப்
  7. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை தாளிப்பதற்கு
  8. உப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  9. தேங்காய் பால் 1 டம்ளர்
  10. தயிர் 1 டம்ளர்
  11. தண்ணீர் 3 டம்ளர்
  12. நெய் 200
  13. சன்ப்ளவர் ஆயில் 200

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்
  2. பெரிய சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் பச்சை மிளகாய் புதினா மல்லி இலை தக்காளி உப்பு சேர்த்து வேகவிடவும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்
  3. அதில் தண்ணீர் தயிர் எலுமிச்சை சாறு தேங்காய் பால் ஆகியவற்றை ஊற்றி தண்ணீர் கொதிக்க விடவும் தண்ணீர் கொதி வந்தவுடன் உப்பு அரிசி சேர்த்து வேக விடவும்
  4. அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் 200 கிராம் நெய் ஊற்றி தம்மில் வைத்துவிடவும் விரும்பினால் ஒரு பின்ச் கேசரி பவுடரை தண்ணீரில் கலந்து தெளித்து விடவும்
  5. சாதம் வெந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான சென்னை பேமஸ் நெய் சோறு தயார்
  6. மீன் குழம்பு கறி குழம்பு மட்டன் கிரேவி ஆகியவற்றுக்கு சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்