வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி கல்யாண மறுவீட்டு விருந்து

Photo of Tirunelveli marriage virunthu by Abinaya bala at BetterButter
612
0
0.0(0)
0

திருநெல்வேலி கல்யாண மறுவீட்டு விருந்து

Oct-09-2018
Abinaya bala
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி கல்யாண மறுவீட்டு விருந்து செய்முறை பற்றி

திருநெல்வேலியில் பாரம்பரியமாக கல்யாணத்திற்கு மறுநாள் செய்யும் விருந்து

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சொதி செய்ய: தேங்காய் ஒன்று
  2. கேரட் 2
  3. பீன்ஸ் ஒரு கப்
  4. முருங்கைக்காய் 1
  5. பாசிப்பருப்பு 2 கப்
  6. எலுமிச்சம்பழம் 1
  7. உருளைக்கிழங்கு ஒன்று
  8. உப்பு தேவையான அளவு
  9. கொத்தமல்லித்தழை தேவையான அளவு
  10. உருளைக்கிழங்கு வருவல் செய்ய
  11. உருளைக்கிழங்கு 5
  12. வெங்காயம் ஒன்று
  13. சோம்பு சிறிதளவு
  14. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா 1
  15. காஷ்மீரி சில்லி பவுடர் 3 டீ ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. இஞ்சி துவையல் செய்ய
  18. இஞ்சி ஒரு சிறு துண்டு
  19. தேங்காய் துருவியது ஒரு கப்
  20. புளி சிறிதளவு
  21. மல்லித் தூள் 3 டீஸ்பூன்
  22. பூண்டு 4 பல்
  23. சீரகம் சிறிதளவு
  24. தாளிக்க கடுகு எண்ணை கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. சொதி செய்யும் முறை
  2. முதலில் தேங்காயை துருவி முதல் தேங்காய்ப்பால் இரண்டாம் தேங்காய்ப்பால் மூன்றாம் தேங்காய்பால் என்று தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்
  3. பின்னர் கேரட் பீன்ஸ் முருங்கைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  4. பாசிப்பருப்பை குக்கரில் 5 விசில் விட்டு நன்கு குழைய வேக வைக்கவும்
  5. பின் வாணலியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய்ப் பாலில் காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  6. பின்னர் வேக வைத்து நன்கு குழைய மசித்து வைத்த பாசிப்பருப்பை காய்கறிகளுடன் சேர்த்து நன்கு வேக விடவும்
  7. காய்கறி நன்கு வெந்தவுடன் முதல் தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்
  8. நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
  9. 5 நிமிடம் கழித்து எலுமிச்சம்பழத்தை பிழியவும்
  10. சுவையான தேங்காய்ப்பால் சொதி ரெடி
  11. உருளைக்கிழங்கு வருவல் செய்ய
  12. ஐந்து உருளைக்கிழங்கை நன்கு குக்கரில் வேக வைத்து வெட்டிக் கொள்ளவும்
  13. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் கரம் மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  14. பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  15. வெட்டி வைத்த உருளைக்கிழங்கு அதனுடன் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து நன்கு வதக்கவும்
  16. உருளைக்கிழங்கு வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி
  17. இஞ்சி துவையல் செய்யும் முறை
  18. வாணலியில் எண்ணெய் இல்லாமல் இஞ்சி தேங்காய் சீரகம் மல்லி தூள் புளி பூண்டு ஆகியவற்றை நன்கு வறுக்கவும்
  19. அந்தக் கலவை ஆறியபின் மிக்ஸியில் சிறிதளவு நீர் ஊற்றி நன்கு மையாக அரைக்கவும்
  20. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையை அதில் சேர்த்து சிறிது அளவு கொதிக்க விடவும்
  21. நீர் வற்றியபின் இறக்கினால் சுவையான இஞ்சி துவையல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்