வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி ஸ்பெஷல் விருந்து

Photo of Tirunelveli spl virunthu by Abinaya bala at BetterButter
688
0
0.0(0)
0

திருநெல்வேலி ஸ்பெஷல் விருந்து

Oct-09-2018
Abinaya bala
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி ஸ்பெஷல் விருந்து செய்முறை பற்றி

திருநெல்வேலி செய்யப்படும் வெள்ளை குழம்பு பன்னீர் வருவல் பச்சைமிளகாய் சட்னி மற்றும் பயித்தங்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை குழம்பு செய்ய
  2. தேங்காய் அரை மூடி
  3. புளி எலுமிச்சம் பழ அளவு
  4. வெள்ளரிக்காய் 1
  5. மஞ்சள் தூள் சிறிதளவு
  6. சிறிய வெங்காயம் ஐந்து
  7. பூண்டு 6 பல்
  8. சிகப்பு மிளகாய் ஐந்து
  9. பச்சை மிளகாய் ஒன்று
  10. தக்காளி ஒன்று
  11. வெங்காயம் ஒன்று
  12. உப்பு தேவையான அளவு
  13. சீரகம் சிறிதளவு
  14. தாளிக்க கடுகு எண்ணெய் வெந்தயம் கருவேப்பிலை
  15. கொத்தமல்லித்தழை தேவையான அளவு
  16. பயத்தங்காய் பொரியல் செய்ய
  17. தேவையான அளவு பயத்தங்காய் சிறிதாக வெட்டியது
  18. தேங்காய் அரை கப்
  19. பச்சை மிளகாய் ஒன்று
  20. மஞ்சள் தூள் சிறிதளவு
  21. வெங்காயம் ஒன்று
  22. பூண்டு 6 பல்
  23. உப்பு தேவையான அளவு
  24. பன்னீர் வருவல் செய்ய
  25. பன்னீர் 100கிராம்
  26. காஷ்மீரி சில்லி பவுடர் 3 டீ ஸ்பூன்
  27. கடலை மாவு 3 ஸ்பூன்
  28. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  29. corn flour ஒரு ஸ்பூன்
  30. உப்பு தேவையான அளவு
  31. பொரிக்க எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் மிக்ஸியில் தேங்காய் தேங்காய் துருவல் சீரகம் மஞ்சள் தூள் சின்ன வெங்காயம் பூண்டு சிகப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின்னர் வெட்டி வைத்த வெள்ளரிக்காயை சேர்த்து வதக்கவும்
  4. இதனை புளித் தண்ணீரில் வேக வைக்கவும்
  5. அரைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. நன்கு கொதிக்க விடாமல் பொங்கி வரும் வரை காத்திருக்கவும் பொங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
  7. பின்னர் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் கொட்டவும்
  8. சூடான வெள்ளை குழம்பு ரெடி
  9. பன்னீர் வருவல் செய்ய
  10. பன்னீருடன் கடலை மாவு அரிசி மாவு கேசரி பவுடர் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு விரவி கொள்ளவும்
  11. அரைமணி நேரம் பிரிட்ஜ் ரேட் செய்யவும்
  12. பின்னர் எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் வறுவல் ரெடி
  13. பயத்தங்காய் பொரியல் செய்ய
  14. பயத்தங்காய் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
  15. மிக்ஸியில் தேங்காய் சீரகம் மஞ்சள்தூள் பூண்டு சிகப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  16. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  17. பின்னர் நறுக்கி வைத்த பயித்தங்காய் சேர்த்து வதக்கி சிறிது நீர் விட்டு பயத்தங்காய் வேக வைக்கவும்
  18. பயத்தங்காய் வெந்த உடன் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்
  19. தேங்காய் வாசம் போகும் வரை நன்கு வதக்கி கொண்டே இருக்கவும்
  20. சுவையான பயத்தங்காய் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்