BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் தோல் துவையல்

Photo of Ridge gourd peel thogayal by Fathima Beevi at BetterButter
48
4
0(0)
0

பீர்க்கங்காய் தோல் துவையல்

Oct-10-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் தோல் துவையல் செய்முறை பற்றி

பீர்க்கங்காய் தோல் துவையல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீர்க்கங்காய் - 2
  2. தக்காளி - 1
  3. கொத்த மல்லி இலை - 1/4 கப்
  4. தேங்காய் துருவல்- 1/2 கப்
  5. உளுந்தம்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
  6. காய்ந்த சிகப்பு மிளகாய் - 5
  7. பூண்டுபற்கள் - 3
  8. இஞ்சி - 1/4  விரலளவு
  9. புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
  10. நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  11. பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  12. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  13. உப்பு- தேவைக்கு
  14. தண்ணீர்- அரைப்பதற்கு
  15. கரம் மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  16. தாளிக்க தேவையான பொருட்கள்:
  17. சிறிய வெங்காயம்-2 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  18. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  19. எண்ணெய்-  2 டீ ஸ்பூன்
  20. கருலேப்பில்லை- ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை நன்கு சுத்தம் செய்து அதன் தோலை நீக்கி தோலை மட்டும் எடுத்து வைக்கவும்
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம்பருப்பு சேர்த்துபொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
  3. பின்பு காய்ந்த மிளகாய் வற்றல், பீர்க்கங்காய் தோல், தக்காளி, தேங்காய் துருவல், பூண்டு பற்கள், இஞ்சித்துண்டு, புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  5. கடைசியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
  6. வதங்கிய கலவையை சிறிது குளிர வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  7. தாளிக்க தேவையான பொருட்களைகொண்டு தாளித்து துவையளுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
  8. பீர்க்கங்காய் தோல் துவையலை சூடான ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்