வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பொரியல்

Photo of Pudalanagai porial by Deepa Srivatsan at BetterButter
358
3
0.0(0)
0

புடலங்காய் பொரியல்

Oct-11-2018
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பொரியல் செய்முறை பற்றி

புடலங்காயுடன் பாசி பருப்பு சேர்த்து செய்வதால் உடம்பிற்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புடலங்காய் அரை கிலோ
  2. பாசிப்பருப்பு 2 கரண்டி
  3. மிளகாய்வற்றல் 2
  4. தேங்காய் துருவல் கால் கப்
  5. எண்ணெய் 2 ஸ்பூன்
  6. கடுகு அரை டீஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  8. பெருங்காயம் சிறிதளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை நன்றாக தண்ணீரில் கழுவி 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. புடலங்காயை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் மற்றும் நறுக்கிய புடலங்காய் மற்றும் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வாணலியே நிலவும்
  5. காய் நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்