வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பன்னீர் ப்ரிட்டர்ஸ்

Photo of Bottle gourd paneer fritters by Fathima Beevi at BetterButter
244
2
0.0(0)
0

சுரைக்காய் பன்னீர் ப்ரிட்டர்ஸ்

Oct-13-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பன்னீர் ப்ரிட்டர்ஸ் செய்முறை பற்றி

சுரைக்காய் பன்னீர் ப்ரிட்டர்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சுரைக்காய் - 1 கப்- பொடியாக நறுக்கியது
  2. பன்னீர்- 100 கிராம் - துருவிக் கொள்ளவும்
  3. உலர் திராட்சை- 15
  4. கடலை மாவு- 1 கப்
  5. பெரிய வெங்காயம்-1- பொடியாக நறுக்கி கொள்ளவும்
  6. கரம் மசாலா தூள்-1/4 டீ ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  9. மிளகு தூள்- 1/4 டீ ஸ்பூன்
  10. இஞ்சி-1/2 இன்ச்
  11. பூண்டு பற்கள்-8
  12. பச்சை மிளகாய்-1
  13. கொத்தமல்லி இலை- சிறிதளவு
  14. உப்பு-தேவையான அளவு
  15. எண்ணெய்- பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சுரைக்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டுபற்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, உலர் திராட்சை, நறுக்கிய வெங்காயம், கடலை மாவு, துருவிய பன்னீர், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், மிளகு தூள், கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து எடுக்கவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின், மாவை சிறிய சிறிய உருண்டைகளாக  தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
  4. சூடான வடைகளை தேங்காய் சட்னி, மிளகாய் சட்னியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்