வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் பரங்கிக்காய் பன்

Photo of Rose Pumpkin Bun by Jayasakthi Ekambaram at BetterButter
266
7
0.0(0)
0

ரோஸ் பரங்கிக்காய் பன்

Oct-16-2018
Jayasakthi Ekambaram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் பரங்கிக்காய் பன் செய்முறை பற்றி

பரங்கிக்காயின் சாறை எடுத்து செய்யும் பன்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 200 கிராம்
  2. சர்க்கரை 40 கிராம்
  3. பேக்கிங் சோடா அரை ஸ்பூன்
  4. பரங்கிக்காய் 70 கிராம்
  5. ஈஸ்ட் ஒன்றரை ஸ்பூன்
  6. வெண்ணை 15 கிராம்
  7. தூள் உப்பு அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை சிறு துண்டுகளாக கட் செய்து ஆவியில் வேக வைக்கவும்
  2. நன்றாக வெந்த பிறகு அதை கரண்டியால் மசித்துக் கொள்ளவும்
  3. கால் டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் ஈஸ்டும் கலந்து 5 நிமிடம் வைக்கவும்
  4. மைதா மாவுடன் மசித்த பரங்கிக்காய் பேஸ்ட் பேக்கிங் பவுடர், 30 கிராம் சர்க்கரை, ஈஸ்ட், வெண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  5. மாவை ஐந்து நிமிடங்கள் நன்றாக பிசையவும்
  6. ஒரு எண்ணெய் தடவிய கிண்ணத்தில் இந்த மைதா மாவை வைத்து ஈரத் துணி போட்டு மூடி ஒன்றரை மணி நேரம் வைக்கவும்
  7. ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு அந்த மாவை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்
  8. பிறகு ஒவ்வொரு உருண்டையையும் ஐந்து பாகமாக பிரிக்கவும்
  9. ஐந்து உருண்டைகளையும் சிறிய சிறிய சப்பாத்தியாக தேய்த்து கொள்ளவும்.
  10. ஐந்து சப்பாத்தியும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்து சுருட்டவும்
  11. அதை நடுவில் கட் செய்யவும்
  12. இப்பொழுது இரண்டு ரோஜா வடிவ பன்கள் கிடைக்கும்
  13. எல்லா உருண்டைகளையும் இதுபோல் ரோஜாக்களாக செய்து அதை அரை மணி நேரம் ஈர துணி போட்டு மூடி வைக்கவும்
  14. ஒரு குக்கருக்குள் கல் உப்பு கொட்டி மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும்
  15. ஒரு தட்டில் வெண்ணை தடவி அதில் இந்த ரோஜா வடிவ பன்களை அடுக்கி இந்த குக்கரில் வைத்து மூடவும்
  16. குக்கருக்கு வெயிட்டும் கேஸ் கட்டும் பயன்படுத்தக்கூடாது
  17. பன்களை 20 நிமிடங்கள் பேக் செய்யவும்
  18. 20 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பன்களை வெளியே எடுத்து மேலே வெண்ணெய் தடவவும்
  19. இப்போது சாஃப்ட்டான பரங்கிக்காய் பன்கள் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்