வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் இறால் கிரேவி

Photo of Bottle gourd Prawn Gravy by Jayasakthi Ekambaram at BetterButter
393
0
0.0(0)
0

சுரைக்காய் இறால் கிரேவி

Oct-17-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் இறால் கிரேவி செய்முறை பற்றி

சுரைக்காயும் இறாலும் கலந்து செய்யும் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் கால் கிலோ
  2. உரித்த இறால் கால் கிலோ
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன்
  6. சோம்புத் தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 6 ஸ்பூன்
  9. கொத்து மல்லி தழை அரை கைப்பிடி அளவு
  10. தேங்காய் விழுது 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி சுரைக்காய் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. இறாலை சுடுதண்ணீரில் நான்கைந்து முறை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி தனியாக வைக்கவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளியையும் அதற்குப் பிறகு சுரைக்காயையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்
  5. காய்கள் வதங்கிய பிறகு இறாலை போட்டு நன்றாக வதக்கவும்
  6. மிளகாய்த் தூள் சோம்புத் தூள் உப்பு தூள் போட்டு வதக்கவும்
  7. ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மூடி போட்டு சிறு தீயில் வைத்து வேக வைக்கவும்
  8. இறால் நன்றாக வெந்து கெட்டிப்பதம் வந்ததும் தேங்காய் விழுது கலந்து கொதித்ததும் அடுப்பை ஆப் செய்யவும்
  9. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்