வடகம் துவையல் | Vadagath Thuvayal in Tamil

எழுதியவர் Divya   |  6th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Vadagath Thuvayal by Divya  at BetterButter
வடகம் துவையல்Divya
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

53

0

Video for key ingredients

    வடகம் துவையல் recipe

    வடகம் துவையல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vadagath Thuvayal in Tamil )

    • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    • புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
    • கல் உப்பு - சுவைக்கு
    • பூண்டு - 4 பற்கள்
    • சிவப்பு மிளகாய் - 10 எண்ணிக்கை
    • வெங்காயம் - 1 நறுக்கப்பட்டது
    • வெங்காயத் தாளிப்பு வடகம் - 1 துண்டு

    வடகம் துவையல் செய்வது எப்படி | How to make Vadagath Thuvayal in Tamil

    1. எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி, வெங்காயம், பூண்டு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
    2. அடுத்து வெங்காய தாளிப்பு வடகத்தைச் சேர்த்து சில விநாடிகள் வறுக்கவும்.
    3. புளித் துண்டோடு உப்பையும் கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து எல்லாவற்றோடும் ஒன்றாக சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
    4. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதத்தோடு பரிமாறவும்.

    எனது டிப்:

    துவையல் ஒரு வாரத்திற்கு வைத்துப் பயன்படுத்தலாம். வடகத்தை அதிகம் வறுத்துவிடாதீர்கள், கசப்புத் தட்டிவிடும்.

    Reviews for Vadagath Thuvayal in tamil (0)