வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் விதை சட்னி

Photo of Snake gourd seed chutney by Fathima Beevi at BetterButter
683
0
0.0(0)
0

புடலங்காய் விதை சட்னி

Oct-17-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் விதை சட்னி செய்முறை பற்றி

புடலங்காய் விதை சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் - 1/2
  2. எண்ணெய் - 2 டீஸ்பூன்
  3. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
  4. கடுகு - 1/4 டீஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு - 1டேபிள் ஸ்பூன்
  6. காய்ந்த மிளகாய் - 3
  7. உப்பு- தேவையான அளவு
  8. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  9. நறுக்கிய வெங்காயம்-1 டேபிள் ஸ்பூன்
  10. கருலேப்பில்லை- சிறிதளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை சுத்தம் செய்து, விதைகள் நீக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்துப் பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து குளிர வைக்கவும்
  3. மீண்டும் சிறிது எண்ணெய் சூடாக்கி, புடலங்காய் விதைகளைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  4. வறுத்து குளிர வைத்துள்ள மற்ற பொருட்களுடன், வறுத்த புடலங்காய் விதைகள், பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும் 
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து, கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கி அரைத்த விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு சில நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
  6. சூடான இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்