வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு பூசணி முளைகட்டிய பயறு தேங்காய் பால் சூப்

Photo of Pumpkin sprouted green gram coconut milk soup by Kalai Rajesh at BetterButter
652
2
0.0(0)
0

சிவப்பு பூசணி முளைகட்டிய பயறு தேங்காய் பால் சூப்

Oct-19-2018
Kalai Rajesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு பூசணி முளைகட்டிய பயறு தேங்காய் பால் சூப் செய்முறை பற்றி

இந்த சூப் எங்கள் வீட்டில் சூப்பர்ஹிட் , வாரமொரு முறையாவது இதனைச் செய்து விடுவேன் ,அதுவும் மஞ்சள்பூசணி ஏப்போது தோட்டத்திலிருந்து வந்தாலும் கண்டிப்பாக எங்கள் வீட்டில் இந்த எளிமையான , ஆரோக்கியமான, சூப் இருக்கும் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு பூசணி - ஒரு பெரிய துண்டு
  2. முளை கட்டிய பச்சைப் பயிறு - 1/4 கப்
  3. தண்ணீர்- 2 கப்
  4. பூண்டு- 3 அல்லது 4 பல்
  5. சீரகம்- 1 தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய்- 1 சிறியது
  7. எண்ணை - 1 தேக்கரண்டி
  8. தேங்காய்ப்பால் -1 கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. மல்லித் தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு
  11. எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்
  2. குக்கரில் 2 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் நறுக்கிய பூசணிக்காயையும் முளைகட்டிய பயிரையும் சேர்க்கவும்
  3. 4 விசில் விட்டு இறக்கவும்
  4. நல்ல தேங்காயை வைத்து 1 கப் பால் எடுக்கவும்
  5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும் கடைசியாக சீரகம் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்
  6. வேகவைத்துள்ள பூசணி பச்சை பயிரை வடித்து கொள்ளவும்
  7. வடித்த தண்ணீரை தனியே வைக்கவும்
  8. மிக்ஸியில் வேகவைத்துள்ள பூசணி பச்சை பயிறு மற்றும் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நைசாக அரைக்கவும்
  9. அரைத்து வைத்துள்ள பொருளைப், வடித்து வைத்துள்ள தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்
  10. இந்த கலவையை வடிகட்டியில் நன்கு வடித்து எடுக்கவும்
  11. வடித்து வைத்துள்ள கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் உப்பு கரையும் வரை கலந்து விட்டால் போதும். (ஒரு கொதி வரும் வரை)
  12. அதிகம் கொதிக்க விடக்கூடாது
  13. அடுப்பிலிருந்து இறக்கி ஓரளவு சூடு ஆறியதும் தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும் , இப்போது உப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்
  14. இப்போது உங்கள் சூப் தயார்
  15. இப்போது எப்படி பரிமாறுவது என்று பார்க்கலாம்
  16. ஒரு சூப் கப்பில் சூப்பை ஊற்றவும்
  17. ஊற்றிய பின் அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி தலை ஓரிரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை சேர்த்து , லேசாக கலந்து விட்டு பரிமரவும்.
  18. முக்கிய குறிப்பு
  19. மல்லித் தலையையும் , எலுமிச்சை சாற்றையும் பரிமாறும் முன் சூப்பில் சேர்த்தால் போதும்.
  20. நல்ல தேங்காய் பால் சேர்ப்பது மிக அவசியம்
  21. குழந்தைகளுக்கு செய்யும் பொழுது பச்சை மிளகாய் சிறிதளவு சேர்த்தால் போதும்
  22. பெரியவர்களுக்கு என்றால் பச்சைமிளகாயை இன்னுமொன்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்
  23. தேங்காய்ப் பால் சேர்ப்பதால் சூப்பை பிரஷ்ஷாக செய்து பரிமாறினால் மிக நன்றாக இருக்கும்
  24. இந்த சுவையான சத்தான சூப்பை வாரம் ஒரு முறையாவது சேய்த்து கொடுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்