வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பாயசம்

Photo of Yellow Pumpkin Payasam by Jayasakthi Ekambaram at BetterButter
453
1
0.0(0)
0

பரங்கிக்காய் பாயசம்

Oct-22-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பாயசம் செய்முறை பற்றி

பரங்கிக்காயை சேர்த்து செய்யும் சேமியா பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா 100 கிராம்
  2. பரங்கிக்காய் 100 கிராம்
  3. சர்க்கரை 150 கிராம்
  4. முந்திரி 6
  5. உலர்ந்த திராட்சை 10
  6. நெய் 4 ஸ்பூன்
  7. உப்புத்தூள் ஒரு சிட்டிகை
  8. பால் கால் லிட்டர்
  9. ஏலக்காய் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை துருவி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்
  2. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்
  3. 3 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை போடவும்
  4. மூன்று நிமிடம் வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும்
  5. அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்
  6. ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து கொதித்ததும் சேமியாவை அதில் போடவும்
  7. சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்
  8. வருத்த பரங்கிக்காயை அதில் சேர்க்கவும்
  9. 3 நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பை ஆப் செய்யவும்
  10. நன்றாக ஆறியதும் அதில் பால் சேர்க்கவும்
  11. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி முந்திரி திராட்சை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்