வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பருப்பு பொரியல்

Photo of Pudalangai Paruppu Poriyal by Divya  at BetterButter
281
0
0.0(0)
0

புடலங்காய் பருப்பு பொரியல்

Oct-22-2018
Divya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பருப்பு பொரியல் செய்முறை பற்றி

புடலங்காயுடன் பாசிப்பருப்பு மற்றும் தேங்காய் மசாலா சேர்த்து செய்யப்படும் பாரம்பரியமான சுவையான மற்றும் ஆரோக்கியமான பொரியல் வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சிம்மெரிங்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் 1/4 கிலோ நறுக்கியது
  2. பாசிப்பருப்பு 2 மேஜைகரண்டி
  3. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  4. கடுகு 1/2 டீஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  6. கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
  7. சீரகம் 1 டீஸ்பூன்
  8. சிகப்பு மிளகாய் 1
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 2 டீஸ்பூன்
  11. கருவேப்பிலை சிறிது
  12. மசாலாவிற்கு:
  13. தேங்காய் 1/2 கப்
  14. சிகப்பு மிளகாய் 3

வழிமுறைகள்

  1. மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  2. புடலங்காய் தோல் மற்றும் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  3. பாசிப்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு முக்கால் பதம் மலர வேக வைக்கவும் பின்னர் தண்ணீரை வடிகட்டவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ,சீரகம் ,காய்ந்த மிளகாய் ,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  5. பின்பு நறுக்கிய புடலங்காயை மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.கடாயை மூடி 5 நிமிடங்கள் வேகவிடவும்.
  6. காய் முக்கால் பதம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் உப்பும் சேர்த்து நன்கு கிளறவும்.
  7. 5 நிமிடங்கள் சிறு தீயில் புடலங்காயை வறுக்கவும்.
  8. கடைசியில் வேகவைத்த பாசிப்பருப்பை போட்டு நன்கு கிளறவும்.
  9. சிறிது கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல் தூவி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்