வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் இறால் கிரேவி

Photo of Ridge gourd Prawn gravy by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
634
3
5.0(0)
0

பீர்க்கங்காய் இறால் கிரேவி

Oct-23-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் இறால் கிரேவி செய்முறை பற்றி

பீர்க்கங்காய் இறால் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கங்காய் -350 கிராம்
  2. இறால்-160 கிராம்
  3. வெங்காயம் -1பொடியாக நறுக்கியது
  4. தக்காளி -1 பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய்-1
  6. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
  9. மல்லிதூள் -2 தேக்கரண்டி
  10. கரம் மசாலா தூள் -1/2 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை -சிறிதளவு
  12. மல்லி இலை -சிறிதளவு
  13. உப்பு -தேவையான அளவு
  14. எண்ணைய் -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பீர்க்கங்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
  4. பின்பு தக்காளி ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி,கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  6. இப்பொழுது நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  8. 150 கிராம் இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.
  9. பிர்கங்காய் நன்கு கொதித்து வெந்நு வந்ததும் அதில் இறாலை சேர்க்கவும்.
  10. இறால் நன்கு வெந்து கிரேவி பதம் வந்ததும் சிறிதளவு மல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
  11. சுவையான பீர்க்கங்காய் இறால் கிரேவி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்