Photo of Rasamalay by sudha rani at BetterButter
810
1
0.0(0)
0

ரசமலாய்

Oct-24-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரசமலாய் செய்முறை பற்றி

வடநாட்டு ஸ்வீட் தீபாவளி ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வே வாட்டர் தயாரிக்க:
  2. பால் 1 லிட்டர்
  3. லெமன் 1 சிறிது
  4. பன்னீர் எடுக்க:
  5. பால் 1 லிட்டர்
  6. வே வாட்டர் தேவையான அளவு
  7. சுகர் சிரப்:
  8. சர்க்கரை 2 கப்
  9. தண்ணீர் 5 கப்
  10. ரப்டி செய்ய:
  11. பால் 1/2 லிட்டர்
  12. சர்க்கரை 3 டேபிள்ஸ்பூன்
  13. மில்க்மெயின்ட் 1/4 கப்
  14. பாதாம்
  15. பிஸ்தா
  16. முந்திரி
  17. ரோஸ் வாட்டர் சிறிது
  18. குங்குமப்பூ சிறிதளவு

வழிமுறைகள்

  1. வே வாட்டர் தயாரிக்க:
  2. பாலை அடுப்பில் வைத்து பொங்கி வரும் போது லெமன் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி ஆறவைத்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும்
  3. பன்னீர் எடுக்க:
  4. பாலை அடுப்பில் வைத்து கொதிக்கும் போது தேவையான அளவு வே வாட்டரை சிறிது சிறிதாக சேர்த்து பால் நன்கு திரிந்ததும் வே வாட்டர் சேர்த்துவதை நிறுத்தி விடவும்
  5. பின் அதை நன்கு வடிகட்டி குளிர்ந்த நீரில் 2 _3 முறை அலசி நன்கு நீரை வடிக்கவும்
  6. பின் ஒரு சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி 1 மணி நேரம் வரை ஒரு வெயிட் வைத்து மீதமுள்ள நீரும் வடியும் வரை வைக்கவும்
  7. இந்த பனீரை ஒரு 25 நிமிடங்கள் வரை நன்கு கைகளால் பிசைந்து உருட்டவும்
  8. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
  9. கொதிக்கும் போது பனீர் உருண்டைகளை சேர்த்து 30 நிமிடம் நன்கு வேகவிடவும்
  10. போட்ட உருண்டைகள் ஒவ்வொன்றும் உப்பி இரு மடங்காக வரும்
  11. ரப்டி:
  12. வாணலியில் பால் விட்டு கொதிக்க விட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும் சற்று கெட்டியானதும் மில்க்மெயின்ட் பொடித்த நட்ஸ் பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  13. பின் சர்க்கரை சிரிப்பில் உள்ள பன்னீர் பால்ஸ் ஐ மட்டும் பாலுடன் சேர்த்து குளிரவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்