அதிரசம் | Adhirasam in Tamil

எழுதியவர் Wajithajasmine Raja mohamed sait  |  28th Oct 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Adhirasam by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
 • ஆயத்த நேரம்

  25

  1 /4 மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

1

அதிரசம் recipe

அதிரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Adhirasam in Tamil )

 • பச்சரிசி -1 கப்
 • வெல்லம் பொடித்தது -3/4 கப்
 • ஏலக்காய் -1 பொடித்தது
 • வெள்ளை எள் -1தேக்கரண்டி
 • நெய் -1 தேக்கரண்டி
 • எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு

அதிரசம் செய்வது எப்படி | How to make Adhirasam in Tamil

 1. தேவையான பொருட்கள்:
 2. முதலில் அரிசியை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து ஒரு காட்டன் துணியில் அரிசியை பரப்பி 15-20 நிமிடம் உலர வைக்கவும்.
 3. உலர்ந்த அரிசியை மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
 4. அரைத்த மாவு கொரகொரப்பாக (ரவை பதம்) இருக்க வேண்டும்.
 5. அடுப்பில் பாத்திரத்தை வைத்து பொடித்த வெல்லம் மற்றும் 1 கப் தண்ணீர் ( 1 கப் அரிசிக்கு 1 கப் தண்ணீர் தான் பாகு காய்ச்ச அளவு ) பாகு காய்ச்சவும்.
 6. பாகு நன்கு கெட்டியாகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.
 7. ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி இடை இடையே பாகு பதம் பார்த்துக்கொள்ளவும். சிறிதளவு பாகினை தண்ணீரில் சேர்த்தால் பாகு கரையாமல் அப்படியே இருக்க வேண்டும். உருட்டினால் பந்து போல் வரும். அதுதான் அதிரசம் செய்ய சரியான பாகு பதம் .உடனே்அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
 8. இப்பொழுது அரைத்த மாவு , பொடித்த ஏலக்காய் , எள் சேர்த்து பாகுடன் நன்கு கிளற வேண்டும்.
 9. மாவை கட்டி இல்லாமல் பாகுடன் கிளற வேண்டும்.இறுதியாக 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
 10. அதிரசம் செய்ய மாவு தயார்.ஒரு காட்டன் துணியால் நன்கு மூடி 1-2 நாள் வைக்கவும்.
 11. மறுநாள் மாவை சிறு உருண்டையாக உருட்டி வாழை இலை அல்லது பாலித்தீன் பையில் வட்டமாக தட்டி நடுவில் விரலால் ஓட்டை போடவும்.
 12. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள மாவை சேர்த்து மிதமான தீயில் பொரிக்கவும்.
 13. இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு அடுப்பில் இருந்து எடுக்கவும்.
 14. சுவையான வீட்டிலே எளிதில் செய்த அதிரசம் தயார்.

Reviews for Adhirasam in tamil (1)

Juvaireya Ra year ago

Ultimate
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.