Photo of Mysurba by sudha rani at BetterButter
227
0
0.0(0)
0

மைசூர்ப்பா

Nov-03-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மைசூர்ப்பா செய்முறை பற்றி

தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர்ப்பா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கடலைமாவு 1 கப்
  2. சர்க்கரை 2 கப்
  3. நெய் 3 கப்
  4. தண்ணீர் 1 கப்

வழிமுறைகள்

  1. கடலைமாவை கட்டியில்லாமல் நன்கு ஜலித்து அதனுடன் சூடான நெய்யை ஊற்றி கரைத்து வைக்கவும்
  2. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மெல்லிய தீயில் ஓரு கம்பி பதம் வந்ததும் கடலைமாவு கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்
  3. வேறு வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடாக்கவும்
  4. கடலைமாவு நன்கு வெந்ததும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்
  5. நன்கு தளதளவென்று ஓரங்களில் பப்ல்ஸ் வரும் போது அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கைவிடாமல் நன்கு கிளறி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
  6. இந்த அளவுக்கு 12 பீஸ் கிடைக்கும்
  7. செவ்வக வடிவ ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு நெய் தடவி பின் ஊற்றவும்
  8. 4 மணிநேரம் வரை விட்டு பின் கவிழ்த்து வைத்து பட்டர் பேப்பரை எடுத்து விட்டு துண்டுகள் போடவும்
  9. சூடா இருக்கு போது கத்தி பட்டா கண்டிப்பாக உடைந்து போய் விடும்
  10. மிகவும் சாப்ட்டான நெய் மைசூர்ப்பா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்