உடனடி ஓட்ஸ் மசாலா பணியாரம் | Instant Oats Masala Paniyaram in Tamil

எழுதியவர் Jyothi Rajesh  |  25th Aug 2015  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Instant Oats Masala Paniyaram by Jyothi Rajesh at BetterButter
உடனடி ஓட்ஸ் மசாலா பணியாரம்Jyothi Rajesh
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1356

1

Video for key ingredients

 • How to make Idli/Dosa Batter

உடனடி ஓட்ஸ் மசாலா பணியாரம் recipe

உடனடி ஓட்ஸ் மசாலா பணியாரம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Instant Oats Masala Paniyaram in Tamil )

 • ஓட்ஸ் - 1 கப் (நான் ஸ்டீல் கட் ஓட்சைப் பயன்படுத்தினேன்)
 • அரிசி மாவு - 3 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • கெட்டித் தயிர் - 1 கப்
 • சமையல் சோடா - 1/2 தேக்கரண்டி
 • வெங்காயம் - 2 பெரியது
 • பச்சை மிளகாய் - 3-4 எண்ணிக்கை
 • சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • கடுகு - 1 தேக்கரண்டி
 • கொத்துமல்லி - 1/4 கப்
 • தண்ணீர் - தேவையான அளவு
 • எண்ணெய் - தாளிப்புக்கும் பணியார சமையலுக்கும்

உடனடி ஓட்ஸ் மசாலா பணியாரம் செய்வது எப்படி | How to make Instant Oats Masala Paniyaram in Tamil

 1. 1. சிறு தீயில் 3-4 நிமிடங்கள் ஓட்சை எண்ணெய்விடாமல் வறுத்துக்கொள்ளவும். ஓட்சை நிறம் மாறவிடாதீர். அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 2. 2. ஓட்ஸ் மாவையும் அரிசி மாவையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். எடுத்து வைக்கவும்.
 3. 3. ஒரு சிறிய வானலியில் 1 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்துக. சூடான எண்ணெயில் கடுகு சேர்த்து வெடிக்கச்செய்யவும். சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
 4. 4. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் மிருதுவாக பிங்காக மாறும்வரை வதக்கவும்.
 5. 5. தாளித்த வெங்காயக் கலவை, நறுக்கிய கொத்துமல்லி இலைகளை ஓட்ஸ் மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தயிர், சமையல் சோடா சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 6. 6. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதிக தண்ணீர் சேர்க்கவேண்டாம். ஓட்ஸ் பணியார மாவு இட்லி அல்லது ஊத்தாப்ப மாவுபோல் இருக்கவேண்டும்.
 7. 7. பணியார பாத்திரத்தைச் சூடுபடுத்துக. ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றவும். ஓட்ஸ் பணியார மாவை ஒவ்வொரு குழியிலும் உப்புவதற்கும் மேலே கொஞ்சம் இடம் விட்டு ஊற்றவும்.
 8. 8. மிதமானச் சூட்டில் 3-4 நிமிடங்களுக்கு சமைக்கவும். அகப்பை அல்லது கரண்டியைப் பயன்படுத்தி பணியாரத்தைத் திருப்பி, பக்கங்களைச் சோதிக்கவும்.
 9. 9. அவை பழுப்பாக இருந்தால் மெதுவாகத் திருப்பி அடுத்தப் பக்கத்தையும் வேகவைக்கவும்.
 10. 10. அடுப்பிலிருந்து இறக்கி அதே செயலை மீதமுள்ள மாவுக்கும் செய்யவும். சுவையான தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியோடு ஓட்ஸ் மசாலா பணியாரத்தைச் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

எப்பாதும் பணியாரத்தைச் சிறுதீயில் இருந்து மிதமானச் சூட்டில் சமச்சீரான வகையில் சமைப்பதை உறுதிசெய்யவும்.

Reviews for Instant Oats Masala Paniyaram in tamil (1)

Supriya Mohan10 months ago

Reply