வீடு / சமையல் குறிப்பு / ஈசி சிக்கன் பிரியாணி

Photo of Pressure cooker chicken biryani by Surya Rajan at BetterButter
840
0
0.0(0)
0

ஈசி சிக்கன் பிரியாணி

Nov-04-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈசி சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

நியூ இயர் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சீரக சம்பா அரிசி ஒரு கப்
  2. நெய் 2 ஸ்பூன்
  3. பெரிய வெங்காயம் 2
  4. தக்காளி ஒன்று
  5. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  6. பிரியாணி மசாலா 3 ஸ்பூன்
  7. சிக்கன் அரை கிலோ
  8. உப்பு தேவையான அளவு
  9. புதினா கொத்தமல்லி இலை ஒரு கையளவு
  10. பட்டை கிராம்பு ஏலக்காய் 2
  11. பிரியாணி இலை ஒன்று
  12. மிளகாய் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
  2. பின் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  3. பின் அதனுடன் தக்காளி தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  5. பின் அதனுடன் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்
  6. புதினா மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்றாக கழுவி மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்
  7. பின் அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  8. பின் பிரியாணி மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  9. பின் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  10. பின் கழுவி எடுத்துள்ள சீரகசம்பா அரிசி சேர்த்து கிளறி விடவும்
  11. பிரஷர் குக்கரை மூடி மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்