வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மேனியா...ஹைதராபாத் சிக்கன் பிரியாணி , சில்லி சிக்கன், சிக்கன் 65, ரைத்தா

Photo of Hyderabadi chicken biryani by Surya Rajan at BetterButter
560
0
0.0(0)
0

சிக்கன் மேனியா...ஹைதராபாத் சிக்கன் பிரியாணி , சில்லி சிக்கன், சிக்கன் 65, ரைத்தா

Nov-08-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மேனியா...ஹைதராபாத் சிக்கன் பிரியாணி , சில்லி சிக்கன், சிக்கன் 65, ரைத்தா செய்முறை பற்றி

தீபாவளி விருந்து....

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரியாணி செய்வதற்கு
  2. பாஸ்மதி அரிசி 1 கப்
  3. சிக்கன் அரை கிலோ
  4. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய் 3ஸ்பூன்
  7. வெங்காயம்-3
  8. தக்காளி ஒன்று
  9. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  10. காஷ்மீரி மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன்
  11. பட்டை கிராம்பு ஏலக்காய் 2
  12. பிரியாணி இலை ஒன்று
  13. புதினா கொத்தமல்லி இலை ஒரு கையளவு
  14. எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
  15. சிக்கன் 65 செய்வதற்கு
  16. எண்ணை பொரிப்பதற்கு
  17. சிக்கன் கால் கிலோ
  18. உப்பு தேவையான அளவு
  19. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  20. கரம் மசாலா கால் ஸ்பூன்
  21. முட்டை ஒன்று
  22. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  23. சோள மாவு 2 ஸ்பூன்
  24. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  25. சில்லி சிக்கன் செய்வதற்கு
  26. எண்ணெய் 2 ஸ்பூன்
  27. சிக்கன் கால் கிலோ
  28. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  29. மல்லி தூள் அரை ஸ்பூன்
  30. குடைமிளகாய் 1
  31. சீரகம் சோம்பு அரை ஸ்பூன்
  32. பட்டை கிராம்பு ஏலக்காய் ஒன்று
  33. பெரிய வெங்காயம் ஒன்று
  34. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  35. கரம் மசாலா அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதை எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பெரிய அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை இஞ்சி பூண்டு விழுது தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
  3. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
  4. பின் அதனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  5. தேவையான உப்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்
  6. பின் அரிசியினை சேர்த்து அதன் மேல் பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை வதக்கி வைத்துள்ள வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து லேசாக கிளறி விடவும்
  7. பின் இரண்டு கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
  8. சிக்கன் 65 செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் சோள மாவு உப்பு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்
  9. பின் அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்
  10. பின் சிறிதாக நறுக்கிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்
  11. பின் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  12. சில்லி சிக்கன் செய்வதற்கு
  13. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் சோம்பு சேர்க்கவும்
  14. பின் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  15. பின் தேவையான உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  16. பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு 2 நிமிடம் வதக்கவும்
  17. பின் தேவையான தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 10 முதல் 15 நிமிடம் வரை வேக விடவும்
  18. கொத்தமல்லி தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்