வீடு / சமையல் குறிப்பு / வெள்ளையப்பம்

Photo of Vellaiyappam by Krishnasamy Vidya Valli at BetterButter
239
0
0.0(0)
0

வெள்ளையப்பம்

Nov-08-2018
Krishnasamy Vidya Valli
315 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெள்ளையப்பம் செய்முறை பற்றி

திருநெல்வேலியில் தீபாவளிக்கு கண்டிப்பாக செய்யப்படுவது இந்த வெள்ளையப்பம். வெளியில் முறுமுறு என்றும் உள்ளே ஸாப்ட்டாகவும் அருமையான சுவையால் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி 1/8 கப்
  2. புழுங்கல் அரிசி 1/8 கப் (புழுங்கல் அரிசி சாப்பிடாதவர்கள் 1/4 கப் பச்சரிசியாக எடுத்துக்கொள்ளவும் அப்போது உளுந்து 2 மேஜைக்கரண்டியாக எடுத்துக்கொள்ளவும்)
  3. உருட்டு உளுந்து 1 மேஜைக்கரண்டி
  4. உப்பு 1/8 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  6. இஞ்சி ஒரு சிறிய துண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  7. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  8. பெருங்காயம்-2 சிட்டிகை
  9. மிளகு கால் தேக்கரண்டி ஒன்றிரண்டாகத் தட்டி சேர்க்கவும்
  10. சீரகம் கால் தேக்கரண்டி
  11. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்தை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து அரைத்து அப்படியே நான்கு மணிநேரம் புளிக்கவிடவும்
  2. உடனே செய்ய விரும்புபவர்கள் ஈஸ்ட் அல்லது தயிர் சேர்க்கவும்
  3. கொடுக்கப்பட்ட மற்ற பொருள்கள் எண்ணெய்த்தவிர சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. குழிவான கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை அப்படியே விடவும்
  5. ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு எடுக்கவும்
  6. அடுப்பை சிம்மில் வைத்து க்கொள்ளவும். சுவையான வெள்ளையப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்