வீடு / சமையல் குறிப்பு / அக்கார வடிசல்

Photo of Akkara vadisal by sudha rani at BetterButter
309
0
0.0(0)
0

அக்கார வடிசல்

Nov-12-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அக்கார வடிசல் செய்முறை பற்றி

தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் சாமிக்கு நெய்வேத்தியம் செய்ய ஏற்ற வகையிலான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 1 கப்
  2. பாசிப்பருப்பு 1/2 கப்
  3. கடலைப்பருப்பு 1/2 கப்
  4. வெல்லம் 2 கப்
  5. பால் 3 கப்
  6. தண்ணீர் 3 கப்
  7. நெய் 1/2 கப்
  8. முந்திரி
  9. திராட்சை
  10. ஏலக்காய்த்தூள்

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பருப்பை 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  2. பின் குக்கரில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 6 விசில் வந்ததும் இறக்கவும்
  3. அரிசியும் பருப்பும் நன்கு குழைந்து இருக்க வேண்டும்
  4. பின் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து இளம் பாகு எடுக்கவும்
  5. அதை அரிசி உடன் சேர்த்து நன்கு கிளறவும்
  6. இடை இடையே சூடான நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கிளறவும்
  7. நன்கு திரண்டு தளதளவென்று வரும் போது ஏலக்காய்த்தூள் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்
  8. அரிசியும் பருப்பும் சம அளவில் இருந்தால் ஆறியபின்பும் மெதுமெதுப்பாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்