வீடு / சமையல் குறிப்பு / பாசிபருப்பு தோசை மற்றும் அவியல்

Photo of Moong dal dosa by Surya Rajan at BetterButter
305
0
0.0(0)
0

பாசிபருப்பு தோசை மற்றும் அவியல்

Nov-13-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிபருப்பு தோசை மற்றும் அவியல் செய்முறை பற்றி

விரதம் கால ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு தோசை செய்வதற்கு
  2. பாசிப்பருப்பு ஒரு கப்
  3. உப்பு
  4. சீரகம் அரை ஸ்பூன்
  5. சிவப்பு மிளகாய் ஒன்று
  6. உளுந்து 3 ஸ்பூன்
  7. அவியல் செய்வதற்கு
  8. தேங்காய் துருவல் அரை கப்
  9. மிளகாய் ஒன்று
  10. பூண்டு 3
  11. கத்திரிக்காய் 2
  12. வாழைக்காய் ஒன்று
  13. கேரட் ஒன்று
  14. பீன்ஸ் 5
  15. உருளைக்கிழங்கு ஒன்று
  16. பெரிய வெங்காயம் ஒன்று
  17. சோம்பு அரை ஸ்பூன்
  18. உப்பு
  19. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு தோசை செய்வதற்கு
  2. பாசி பருப்பு உளுந்து சீரகம் மிளகாய் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. பின் அதனை மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. பின் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. தோசைக்கல்லை சூடாக்கி தோசைகளாக சுட்டு எடுக்கவும்
  6. அவியல் செய்வதற்கு
  7. தேங்காய் துருவல் சோம்பு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  8. காய்கறிகளை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்
  9. கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் மற்றும் பூண்டினை பிடித்து சேர்க்கவும்
  10. பின் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கி சிறிதளவு தண்ணீர் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து பத்து நிமிடம் வேகவிடவும்
  11. அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்