நெய் சோறு | Ghee Rice in Tamil

எழுதியவர் Wajithajasmine Raja mohamed sait  |  16th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ghee Rice by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
நெய் சோறுWajithajasmine Raja mohamed sait
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

0

0

நெய் சோறு recipe

நெய் சோறு தேவையான பொருட்கள் ( Ingredients to make Ghee Rice in Tamil )

 • பாஸ்மதி அரிசி -3 கப்
 • வெங்காயம் -2 நீளமாக நறுக்கியது
 • தக்காளி -1 சிறியது
 • பச்சை மிளகாய்-3
 • தயிர் -2 தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு விழுது-2-3 தேக்கரண்டி
 • முந்திரி-10
 • பட்டை -2 சிறிய துண்டு
 • ஏலக்காய் -5
 • கிராம்பு -5
 • பிரியாணி இலை-1
 • மல்லி இலை- சிறிதளவு
 • நெய்-3-4 தேக்கரண்டி
 • எண்ணெய் -சிறிதளவு
 • உப்பு- தேவையான அளவு

நெய் சோறு செய்வது எப்படி | How to make Ghee Rice in Tamil

 1. தேவையான பொருட்கள் :
 2. முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.அரிசி ஊறும் நேரத்தில் வெங்காயம்,தக்காளி ,மிளகாய் மல்லிஇலை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 3. குக்கரில் 3 தேக்கரண்டி நெய் ,2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
 4. நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 5. வெங்காயம் ஓரளவு வதங்கியதும் 3 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
 6. பின்பு தக்காளி , பச்சை மிளகாய் , மல்லி இலை சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
 7. தயிர் 2 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.
 8. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.(1கப் அரிசிக்கு-1 1/2 கப் தண்ணீர்.3கப் அரிசிக்கு -4 1/2 கப் தண்ணீர்)
 9. இப்பொழுது 10 முந்திரியை மிக்சியில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
 10. அரைத்த முந்திரி விழுதையும் சேர்க்கவும்.
 11. இப்பொழுது ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ,தேவையான அளவு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
 12. குக்கரில் 2 விசில் வேகவைத்து இறக்கவும்.
 13. இப்பொழுது சுவையான நெய் சோறு தயார்.
 14. மட்டன் குழம்பு உடன் பரிமாறவும்.

Reviews for Ghee Rice in tamil (0)