BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / நெய் சோறு

Photo of Ghee Rice by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
0
1
0(0)
0

நெய் சோறு

Nov-16-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெய் சோறு செய்முறை பற்றி

நெய் சோறு

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி -3 கப்
  2. வெங்காயம் -2 நீளமாக நறுக்கியது
  3. தக்காளி -1 சிறியது
  4. பச்சை மிளகாய்-3
  5. தயிர் -2 தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது-2-3 தேக்கரண்டி
  7. முந்திரி-10
  8. பட்டை -2 சிறிய துண்டு
  9. ஏலக்காய் -5
  10. கிராம்பு -5
  11. பிரியாணி இலை-1
  12. மல்லி இலை- சிறிதளவு
  13. நெய்-3-4 தேக்கரண்டி
  14. எண்ணெய் -சிறிதளவு
  15. உப்பு- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் :
  2. முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.அரிசி ஊறும் நேரத்தில் வெங்காயம்,தக்காளி ,மிளகாய் மல்லிஇலை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. குக்கரில் 3 தேக்கரண்டி நெய் ,2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
  4. நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் ஓரளவு வதங்கியதும் 3 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  6. பின்பு தக்காளி , பச்சை மிளகாய் , மல்லி இலை சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
  7. தயிர் 2 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.
  8. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.(1கப் அரிசிக்கு-1 1/2 கப் தண்ணீர்.3கப் அரிசிக்கு -4 1/2 கப் தண்ணீர்)
  9. இப்பொழுது 10 முந்திரியை மிக்சியில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
  10. அரைத்த முந்திரி விழுதையும் சேர்க்கவும்.
  11. இப்பொழுது ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ,தேவையான அளவு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  12. குக்கரில் 2 விசில் வேகவைத்து இறக்கவும்.
  13. இப்பொழுது சுவையான நெய் சோறு தயார்.
  14. மட்டன் குழம்பு உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்