மைசூர் பாக் | Mysore Pak in Tamil

எழுதியவர் Latha Subramanian  |  18th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mysore Pak by Latha Subramanian at BetterButter
மைசூர் பாக்Latha Subramanian
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    15

    மக்கள்

62

0

மைசூர் பாக் recipe

மைசூர் பாக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore Pak in Tamil )

  • கடலை மாவு - 1 கப்
  • சர்க்கரை - 2 1/2 கப்
  • தண்ணீர் - 1 1/4 கப்
  • நெய் - 1 1/4

மைசூர் பாக் செய்வது எப்படி | How to make Mysore Pak in Tamil

  1. ஒரு கனமான அடிபாகமுள்ள கடாயை எடுத்து கடலை மாவை சற்றே வேறு எதுவும் சேர்க்காமல் வறுக்கவும்.
  2. கடலை மாவு நிறம் மாறாமல் பார்த்து ஒரு தட்ல் எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து சர்க்கரையை முற்றிலுமாக உருக்கவிடவும். அங்கே சர்க்கரைக் கட்டி இருக்கக்கூடாது.
  3. இப்போது வேறொரு கடாயை எடுத்து நல்லெண்யை ஊற்றி அடுப்பில் வைக்கவும். கேசை சிம்மில் வைக்கவும். சர்க்கரை முற்றிலுமாகக் கரைந்ததும், கடலை மாவை நீங்கள் சேர்க்கலாம். கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
  4. கட்டிகளெல்லாம் போகும்வரை கிண்டிக்கொண்டே இருக்கவும். ஏதாவது இருந்தால் இப்போது ஒரு கரண்டி சூடான நெய்யை இந்த கடலை மாவுக் கலவையில் சேர்க்கலாம். நீங்கள் இந்தச் சூடான நெய்யைச் சேர்த்தால் கலவை பஞ்சுபோல் ஆகிவிடும். நெய் ஒட்டுமொத்தத்தையும் உறிஞ்சும் கலந்துகொண்டே இருக்கவும்.
  5. இப்போது நீங்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறுவதைப் பார்ப்பீர்கள், கலவையும் இங்கும் அங்கும் பஞ்சுபோல் இருக்கும். இந்த சமயத்தில் கேசை நிறுத்தாதீர்கள். எண்ணெய் தடவிய தட்டில் இதை ஊற்றி எண்ணெய் தடவியைக் கரண்டியால் சமப்படுத்தவும். நான் அதைச் செய்யவில்லை. ஆறியதும் துண்டுகளாக நீங்கள் வெட்டிக்கொள்ளலாம்.

எனது டிப்:

கேசை சிம்மில் வைக்கவும்! ஒரு போதும் நிறுத்தவேண்டாம்.

Reviews for Mysore Pak in tamil (0)