BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை பாயாசம்

Photo of Wheat rava payasam by Asiya Omar at BetterButter
292
1
0(0)
0

கோதுமை ரவை பாயாசம்

Nov-20-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை பாயாசம் செய்முறை பற்றி

ஏதாவது விஷேசம் என்றால் டக்கென்று இந்த பாயாசம் செய்து பரிமாறிவிடலாம். மீலாதுநபி ஸ்பெசலாக இந்த பாயாசம் செய்து அக்கம் பக்கம் கொடுத்து அசத்தியாச்சு.

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கோதுமை ரவை -200 கிராம்
  2. பால் -1 லிட்டர்
  3. நாட்டுச் சர்க்கரை -200 கிராம்
  4. ஸ்வீட் கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
  5. ஏலப்பொடி - 6 ( பொடித்தது)
  6. சாப்ரான் -2 பின்ச்
  7. நெய் -2 மேஜைக்கரண்டி
  8. முந்திரி பருப்பு - 20
  9. பாதாம் -20( ஊற வைத்து நறுக்கியது)
  10. கிஸ்மிஸ் -2 மேஜைக்கரண்டி
  11. உப்பு -2 பின்ச்.

வழிமுறைகள்

  1. கோதுமை ரவையை 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு வறுக்கவும். மணம் வரும் பொழுது ஒரு லிட்டர் காய்ச்சிய பால் விட்டு வேக வைக்கவும்.
  2. கோதுமை ரவை 15 நிமிடத்தில் வெந்து விடும்.ஏலப்பொடி சேர்க்கவும்.
  3. நாட்டுச்சர்க்கரையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்ததும் வடிகட்டிச் சேர்க்கவும்.
  4. கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.சாப்ரான் பொடித்து மேலே தூவவும்.
  5. நெய் சூடு செய்து முந்திரி,கிஸ்மிஸ்,பாதாம் வறுத்து சேர்க்கவும். நாட்டுச்சர்க்கரை,சாப்ரான் சேர்த்தால் தான் இந்த நிறம் வரும். ரொம்ப கெட்டியாக இருந்தால் கொதி நீர் சேர்க்கவும்.
  6. சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.
  7. பவுலில் எடுத்துப் பரிமாறவும்.
  8. சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய கோதுமை ரவை பாயாசம் தயார். 200 கிராம் கோதுமை ரவை அளவு செய்தால் 15 நபர் வரை பரிமாறலாம். லூசாக குடிப்பது போல் செய்தால் இன்னும் அதிகம் வரும்.செமை!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்