வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ஸ்வீட்கான் பால்ஸ்

Photo of Aloo sweetcorn balls by Krishnasamy Vidya Valli at BetterButter
155
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு ஸ்வீட்கான் பால்ஸ்

Nov-21-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ஸ்வீட்கான் பால்ஸ் செய்முறை பற்றி

மாலை நேரத்தில் குழந்தைகள் விரும்பும் எளிமையான ஸ்தாக்ஸ்வெரைட்டி இது. ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஸ்வீட்கான் (புரோஸன்)1/4 கப்
  2. உருளைக்கிழங்கு 1 பெரியது (தோல்சீவி பொடியாக நறுக்கி மைக்ரோவேவ் அவனில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்)
  3. கடலை மாவு அரிசி மாவு தலா 1/8 கப்
  4. கொத்தமல்லி இலை சிறிது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. உப்பு கால் தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் ஒன்று
  7. தனியா பொடி சீரகப் பொடி பெருங்காயம் மிளகு பொடி காஷ்மீரி சில்லி பவுடர் ஆம்சூர் பவுடர் கரம்மசாலாபொடி தலா 1/8 தேக்கரண்டி
  8. ஷாலோபிரை அல்லது டீப்பிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஸ்வீட்கான் பச்சை மிளகாய் உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்
  3. எல்லாவற்றையும் கொத்தமல்லி இலை அரிசி மாவு கடலை மாவு சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்நிறமாக ஷாலோபிரை அல்லது டீப்பிரை செய்து எடுக்கவும்
  5. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்