வீடு / சமையல் குறிப்பு / பேபி உருளை சாதம்

Photo of Baby potato rice ( no onion no garluc) by Deepa Srivatsan at BetterButter
804
0
5.0(0)
0

பேபி உருளை சாதம்

Nov-24-2018
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேபி உருளை சாதம் செய்முறை பற்றி

பேபி பொட்டேடோ குழந்தைகள் அனைவருக்கும் பிடிக்கும் அதை வைத்து தயாரித்துள்ள இந்த சாதம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேபி பொட்டேடோ கால்கிலோ
  2. உதிரியாக வடித்த சாதம் 3 கப்
  3. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு 3 ஸ்பூன்
  5. மிளகாய்வற்றல் 2
  6. கொத்தமல்லி வரை அரை டீஸ்பூன்
  7. பெருங்காயம் 2 சிட்டிகை
  8. காரப் பொடி அரைஸ்பூன்
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பேபி பொட்டேடோ வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்
  2. அதே நேரத்தில் வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு கடலை பருப்பு மிளகாய் வற்றல் கொத்தமல்லி வரை நன்றாக வறுக்கவும்
  3. ஆறியதும் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ளவும்
  4. அதன் பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு போட்டு வேக வைத்த உருளைக்கிழங்கை போடவும்
  5. இரண்டு நிமிடம் கழித்து மஞ்சள்தூள் உப்பு காரப் பொடி மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்
  6. அதன்பின் வறுத்த பொடியை சேர்த்து 3 நிமிடம் பிரட்டவும்
  7. பிறகு உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக பிரட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்