வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி மீன் வறுவல்

Photo of Ginger fish fry by Asiya Omar at BetterButter
853
0
0.0(0)
0

இஞ்சி மீன் வறுவல்

Nov-25-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி மீன் வறுவல் செய்முறை பற்றி

முள்ளு இல்லாத மீன் துண்டுகளில் இந்த வறுவல் செய்தால் அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முள்ளில்லாத மீன் துண்டுகள் -300 கிராம்
  2. மீனில் தடவ மசாலாவிற்கு :-
  3. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது -1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவைக்கு.
  7. இஞ்சி வறுவல் செய்ய:-
  8. எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  9. கடுகு-1/2 தேக்கரண்டி
  10. கிள்ளிய மிளகாய் வற்றல்-1
  11. கருவேப்பிலை -1 இணுக்கு
  12. துருவிய இஞ்சி 2 தேக்கரண்டி.
  13. நறுக்கிய வெங்காயம் -1
  14. மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
  15. அலங்கரிக்க நறுக்கிய மல்லி இலை -சிறிது.

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளில் மேற் சொன்னபடி மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு பிரட்டி வைக்கவும்.
  2. கால் மணி நேரம் மூடி வைக்கவும்.
  3. ஒரு வாணலியில் 1-2 மே.க.எண்ணெய் விட்டு மீனை பொரித்து எடுக்கவும்.
  4. இஞ்சி வறுவல் செய்ய பொருட்கள் தயார் செய்யவும்.வெங்காயம் நறுக்கி எடுக்கவும்.இஞ்சி துருவி எடுக்கவும்.
  5. மீன் பொரித்து எடுத்த எண்ணெய் உள்ள தவாவில் கடுகு,வற்றல்,கருவேப்பிலை ,வெங்காயம்,துருவிய இஞ்சி சேர்க்கவும் .நன்கு வதக்கவும்,சிறிது மிளகாய்த்தூள்,சிறிது உப்பு தூவி பிரட்டவும்.,அத்துடன் பொரித்த மீன் சேர்க்கவும்.
  6. மீன் உடையாதவாறு பிரட்டவும்.மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும். இஞ்சி மீன் வறுவல் தயார்.விரும்பினால் சில துளிகள் எலுமிச்சை பிழியலாம்.
  7. மிக சுவையாக இருக்கும்.பேலியோ டயட் இருப்பவர்கள் செய்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்