வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி ஆம்லெட் ரோல்

Photo of Chapathi Omlette Roll by Jayasakthi Ekambaram at BetterButter
168
0
0.0(0)
0

சப்பாத்தி ஆம்லெட் ரோல்

Nov-26-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி ஆம்லெட் ரோல் செய்முறை பற்றி

ஆம்லெட் மேல் சப்பாத்தியை பிரஸ் செய்து சமைக்கும் ரோல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு கால் கிலோ
  2. உப்புத்தூள் 1 ஸ்பூன்
  3. சமையல் எண்ணெய் தேவையான அளவு
  4. முட்டை 6
  5. வெங்காயம் ஒன்று
  6. கேரட் ஒன்று
  7. மிளகுத்தூள் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உப்பு தூள் போட்டு பிசைந்து சப்பாத்திகளாக இடவும்
  2. சப்பாத்திகளை ஒருபுறம் நன்றாக வேகும்படி சுட்டெடுத்து மறுபக்கத்தில் லேசாக சூடுபடுத்தி வைக்கவும்
  3. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. கேரட்டை துருவிக் கொள்ளவும்
  5. ஒரு முட்டையில் ஒரு சிட்டிகை உப்பு தூள் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
  6. ஒரு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடு பண்ணி அதில் முட்டை கலவையை ஊற்றவும்
  7. அதன்மேல் வெங்காயம் கேரட் மிளகுத்தூள் தூவவும்
  8. ஒரு சப்பாத்தி எடுத்து நன்றாக வெந்த பக்கத்தை ஆம்லெட் மேல் வைத்து பிரஸ் பண்ணவும்
  9. இப்போது அதை திருப்பி போட்டு மீண்டும் வேக வைக்கவும்
  10. இரண்டு புறமும் நன்றாக வெந்த பிறகு அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து ரோல் போல சுருட்டவும்
  11. கூரான கத்தியால் சிறுசிறு துண்டுகளாக கட் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்