வீடு / சமையல் குறிப்பு / ஹெல்த்தி பேரிச்சை குக்கீஸ்

Photo of Healthy Dates Cookies by Sowmya Sundar at BetterButter
393
0
5.0(0)
0

ஹெல்த்தி பேரிச்சை குக்கீஸ்

Nov-26-2018
Sowmya Sundar
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹெல்த்தி பேரிச்சை குக்கீஸ் செய்முறை பற்றி

பேரிச்சம்பழம் , சத்துமாவு மற்றும் கோதுமைமாவு சேர்த்து செய்த ஈசி குக்கீஸ்.குழந்தைகளுக்கு கடையில் வாங்கி தராமல் வீட்டிலேயே செய்து தரலாம் இந்த ஆரோக்கியமான குக்கீீஸ்.இதன் அளவை நினைவில் வைப்பதும் சுலபம்.அனைத்து பொருட்களும் ஒரே அளவு தான் எடுக்க வேண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பேரிச்சம்பழம் 1/4 கப்
  2. சத்துமாவு 1/4 கப்
  3. கோதுமை மாவு 1/4 கப்
  4. நெய் 1/4 கப்
  5. பொடித்த டெமரோரா சர்க்கரை 1/4 கப்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் சத்துமாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து மெதுவாக கலந்து பிசைந்து கொள்ளவும்
  3. மாவை உருண்டைகளாக பிரித்து உருட்டி லேசாக தட்டி கொள்ளவும் .அதில் முள் கரண்டியால் லேசாக அழுத்தி பேக்கிங் டிரேயில் இடைவெளி விட்டு அடுக்கி கொள்ளவும்
  4. 180 டிகிரியில் பத்து நிமிடம் ப்ரீ ஹீட் செய்த ஓவனில் வைத்து 12 நிமிடங்கள் பேக் செய்யவும்
  5. ஆறியதும் காற்று புகாத டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்