வீடு / சமையல் குறிப்பு / எளிமையான மதிய உணவு ப்ளேட்டர்

Photo of Easy Lunch Meals Platter by Hameed Nooh at BetterButter
484
2
0.0(0)
0

எளிமையான மதிய உணவு ப்ளேட்டர்

Nov-26-2018
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எளிமையான மதிய உணவு ப்ளேட்டர் செய்முறை பற்றி

எளிமையான அதே நேரத்தில் சத்தான மதிவு உணவிறகான கஞ்சி சாதம் தேங்காய்ப்பால் மீன் குழம்பு மற்றும் வேர்க்கடலை எள் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கஞ்சி சாதம் செய்வதற்கு :
  2. அரிசி - 2 கப்
  3. வெங்காயம் - 1
  4. கடுகு - 1 தேக்கரண்டி
  5. வெந்தயம் - அரை தேக்கரண்டி
  6. பூண்டு பற்கள் - 8
  7. கருவேப்பிலை - ஒரு கீற்று
  8. உப்பு - சுவைக்கேற்ப
  9. தேங்காய்ப்பால் மீன் குழம்பிற்கு :
  10. நெய் மீன் - கால் கிலோ
  11. வெங்காயம் - 1
  12. தக்காளி - 1
  13. மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
  14. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  15. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  16. பச்சை மிளகாய் - 1
  17. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  18. பூண்டு - 6 பற்கள்
  19. கடுகு - 1 தேக்கரண்டி
  20. தேங்காய் பால் - 1/2 கப்
  21. தேங்காய்ப் பொடி - 1 மேசைக்கரண்டி
  22. கறிவேப்பிலை - 1 கீற்று
  23. நல்லெண்ணெய் -2 மேசைக்கரண்டி
  24. வேர்க்கடலை எள் சட்னி செய்ய :
  25. வேர்க்கடலை - 1/4 கப்
  26. பொட்டுக்கடலை - அரை தேக்கரண்டி
  27. வெள்ளை எள் - 2 மேசைக்கரண்டி
  28. புளி - சிறிய துண்டு
  29. இஞ்சி - அரை இன்ச் துண்டு
  30. கருவேப்பிலை - ஒரு கீற்று
  31. பச்சை மிளகாய் - 3
  32. உளுந்து - 2 தேக்கரண்டி
  33. கடுகு - அரை தேக்கரண்டி
  34. உப்பு - சுவைக்கேற்ப
  35. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கஞ்சி சாதம் தயாரிக்க அரிசியை நன்றாக கழுவி கொஞ்சம் அதிகமாக தண்ணீர் ஊற்றி குழைய சாதம் தயாரித்துக் கொள்ளவும்.
  2. பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
  3. பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது வெந்தயம் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்.
  4. தாளித்ததை குழைந்த கஞ்சி சாதத்தில் நன்றாக கலந்து விடவும்.
  5. இனி தேங்காய்ப்பால் மீன் குழம்பு மீனை சுத்தம் செய்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் சிறிது எண்ணெய் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  6. புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிசைந்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  7. வடித்த புளிக் கரைசலில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக பிசைந்து 2 கப் தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
  8. வடித்த புளிக் கரைசலில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக பிசைந்து 2 கப் தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
  9. அதில் நறுக்கிய மூன்று பூண்டு பற்கள் 1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்கவும்.
  10. தேங்காய் பாலில் தேங்காய் பொடியை கலக்கி அதையும் ஊற்றி ஊற வைத்த மீனை போடவும்.
  11. அதனை ஒரு மண் சட்டியில் ஊற்றி மேலே ஒரு தட்டால் மூடி போட்டு கொதிக்க விடவும்.
  12. மீனை வேக வைக்கும் அதே நேரத்தில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் கருவேப்பிலை வெந்தயம் நறுக்கிய வெங்காயம் உரலில் சற்று இடித்த பூண்டு போட்டு தாளிக்கவும்.
  13. மீன் வெந்ததும் தாளிப்பை மீன் குழம்பில் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
  14. இனி வேர்க்கடலை எள் சட்னி செய்வதற்கு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தோல் நீக்கிய வேர்க்கடலை பொட்டுக்கடலை கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்
  15. பிறகு அதே கடாயில் எள்ளையும் சேர்த்து வறுக்கவும்
  16. இனி வறுத்தவற்றோடு சிறு துண்டு இஞ்சி புளி பச்சைமிளகாய் உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்
  17. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம்
  18. இறுதியாக கடாயில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அதில் கடுகு கருவேப்பிலை மற்றும் உளுந்தை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்
  19. எளிமையான அதே நேரத்தில் சுவையான மிகவும் குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய ஆரோக்கியமான மதிய உணவு முறையாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்