வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் புளிக் குழம்பு

Photo of Snake gourd tamarind gravy by Rachell Revathi Samuel at BetterButter
823
1
0.0(0)
0

புடலங்காய் புளிக் குழம்பு

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் புளிக் குழம்பு செய்முறை பற்றி

புடலங்காயுடன் புளி சேர்த்து செய்யப்படும் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காய் 1
  2. புளி எலுமிச்சை அளவு
  3. எண்ணெய் 2 ஸ்பூன்
  4. கடுகு 1/4 ஸ்பூன்
  5. வெங்காயம் 1
  6. கருவேப்பிலை சிறிது
  7. தக்காளி 1
  8. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  9. மல்லி தூள் 2 ஸ்பூன்
  10. தேங்காய் 1/4 கப்
  11. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் வைத்து உப்பு சேர்த்து 4-5 விசில் விட்டு இறக்கவும்.
  2. நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைக்கவும்.
  3. புடலங்காய் அடுப்பில் இருக்கும் போதே தேங்காய் தக்காளி வெங்காயம் நறுக்கி கொள்ளவும்.
  4. மிக்ஸியில் தேங்காய் நறுக்கிய வெங்காயத்தில் பாதி தக்காளி சேர்த்து அரைக்கவும்.
  5. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  7. மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
  8. மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  9. புளியை கரைத்து சேர்க்கவும்.
  10. குக்கரை திறந்து வேகவைத்த புடலங்காயை சேர்க்கவும்.
  11. அரைத்த தேங்காய் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  12. 1/2 ஸ்பூன் சீரகத்தூள் சேர்க்கவும். கொதி வந்ததும் 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.
  13. சுவையான புடலங்காய் புளிக்குழம்பு தயார்.
  14. 30 நிமிடத்திற்குள் தயார் செய்து விடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்