வீடு / சமையல் குறிப்பு / மணித்தக்காளி கீரை தண்ணிசாறு

Photo of Blacknight Shade Greens Stew by Devi Bala Chandrasekar at BetterButter
399
2
0.0(0)
0

மணித்தக்காளி கீரை தண்ணிசாறு

Nov-28-2018
Devi Bala Chandrasekar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மணித்தக்காளி கீரை தண்ணிசாறு செய்முறை பற்றி

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களுக்கு உகந்த இந்த தண்ணிசாறு என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மணித்தக்காளி கீரை - 2 கப்
  2. வெங்காயம் - 1/2 கப் (நீளவாக்கில் அரிந்தது)
  3. பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் அரிந்தது)
  4. அரிசி களைந்த தண்ணீர் - 3 கப்
  5. கிராம்பு - 2
  6. பட்டை - ஒரு சிறிய துண்டு
  7. உப்பு - 1 தேக்கரண்டி
  8. எண்ணைய் - 1 தேக்கரண்டி
  9. துருவிய தேங்காய் - 1/2 கப்
  10. சீரகம் - 1 தேக்கரண்டி
  11. எள்ளு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. துருவிய தேங்காய், எள்ளு மற்றும் சீரகத்தை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்
  2. அடுப்பை பற்றவைத்து ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணைய் சேர்த்து சூடாக்கி அதில் கிராம்பு, பட்டை சேர்த்து பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியவுடன் அரிசி களைந்த தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் சுத்தப்படுத்திய கீரையை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  4. கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை சேர்த்து நுரைத்து வரும்பொழுது அடுப்பிலிருந்து இறக்கவும்.
  5. இதை சூப் ஆகவோ அல்லது சூடான சாதத்துடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்