வீடு / சமையல் குறிப்பு / பூண்டு குழம்பு ,செட்டிநாடு மசாலா ஆம்லெட்டும்

Photo of Garlic kulampu,chettinattu masala omplette by Shoba Jaivin at BetterButter
442
0
0.0(0)
0

பூண்டு குழம்பு ,செட்டிநாடு மசாலா ஆம்லெட்டும்

Dec-01-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு குழம்பு ,செட்டிநாடு மசாலா ஆம்லெட்டும் செய்முறை பற்றி

என் அம்மாவின் கை பக்கத்தில் இதை கற்றுக்கொண்டேன் சாப்பிட சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும் இது என் மாமனார் வீட்டிலும் மிகவும் பிரபலம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
  2. பூண்டு பற்கள் 25
  3. நல்லெண்ணெய் 1 ஸ்பூன்
  4. கடுகு அரை ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன்
  5. புளித்தண்ணீர் சிறிதளவு
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. மசாலா செய்ய தேவையான பொருட்கள்
  9. முட்டை
  10. மிளகு அரை ஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன்
  11. தேங்காய்த்துருவல் ஒரு ஸ்பூன்
  12. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  13. பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் தாளிக்கவும்
  2. உரித்த பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  4. புளித் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்
  5. மசாலா முட்டை ஆம்லெட் செய்வது எப்படி
  6. ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டை வெங்காயம் பச்சை மிளகாய் மிளகு சீரகப் பொடி மற்றும் தேங்காய் துருவல் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  7. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்றி நன்கு வெந்ததும் சூடான சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்