வீடு / சமையல் குறிப்பு / வெந்தியக்கீரை போண்டா

Photo of Fenugreek leaves Bonda by Jayasakthi Ekambaram at BetterButter
433
0
0.0(0)
0

வெந்தியக்கீரை போண்டா

Dec-02-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தியக்கீரை போண்டா செய்முறை பற்றி

கடலை மாவில் வெந்தயக் கீரையை கலந்து செய்யும் போண்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெந்தயக்கீரை ஒரு கட்டு
  2. கடலை மாவு கால் கிலோ
  3. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  7. வெங்காயம் ஒன்று
  8. கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
  9. தூள் உப்பு ஒரு ஸ்பூன்
  10. சமையல் எண்ணெய் பொரிப்பதற்கு
  11. ஆப்ப சோடா ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடலைமாவை வாணலியில் போட்டு சிறிய தீயில் வைத்து சூடாகும் வரை வறுத்துக் கொள்ளவும்
  2. வெந்தயக் கீரையின் வேரை நீக்கி நன்றாக அலசிக் கொள்ளவும்
  3. வெங்காயம் வெந்தயக்கீரை கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. கடலை மாவுடன் அரிசி மாவையும் பொடியாக நறுக்கிய வெங்காயம் வெந்தயக்கீரை கொத்தமல்லித் தழையையும் கலந்து கொள்ளவும்
  5. மிளகாய்த் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சோம்புத் தூள் உப்பு தூள், ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளவும்
  6. தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  7. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் ஸ்பூனால் இந்த மாவை எடுத்து ஊற்றி போண்டாக்கள் செய்யவும்
  8. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்