வீடு / சமையல் குறிப்பு / கறிவேப்பிலை குழம்பு

Photo of KARIVEPPILAI KUZHAMBU by Radha Balu at BetterButter
301
1
0.0(0)
0

கறிவேப்பிலை குழம்பு

Dec-04-2018
Radha Balu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கறிவேப்பிலை குழம்பு செய்முறை பற்றி

இது என் அம்மா செய்யும் மிக ருசியான குழம்பு. என் அம்மாவின் குழம்பின் ருசி ஏனோ நான் செய்யும்போது சற்றே குறைவு எனத் தோன்றும்.குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு   நல்ல  பத்தியக்  குழம்பு  இது.  குளிர்  காலத்தில் உடலுக்குசூடுகொடுக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆய்ந்த  கறிவேப்பிலை--- ½ கப்
  2. மிளகு --  6 தேக்கரண்டி
  3. சீரகம் --  4 தேக்கரண்டி
  4. புளி -- ஒரு  சிறிய  எலுமிச்சை  அளவு
  5. பெருங்காயம் -- 1 சிறு  துண்டு
  6. நல்லெண்ணை -- 8 தேக்கரண்டி
  7. கடுகு -- 1 தேக்கரண்டி
  8. உப்பு---தேவையான  அளவு

வழிமுறைகள்

  1. மூன்று தேக்கரண்டி  எண்ணையில்  முறையே  பெருங்காயம், மிளகு,சீரகம் ஆகியவற்றை  வரிசையாக  சிவக்க  வறுக்கவும். 
  2. அவற்றை எடுத்துவிட்டு கறிவேப்பிலையைப்போட்டுவதக்கவும்.  
  3. இவை எல்லாவற்றுடன் புளி,தேவையான உப்பு சேர்த்து  மிக்ஸியில்  1 1/2 கப்  தண்ணீர்  சேர்த்து   நைஸாக  அரைக்கவும்.
  4. வாணலியில் மீதியுள்ள   எண்ணையை  விட்டு,அதில் கடுகு  தாளிக்கவும். 
  5. வெடித்ததும்  அரைத்த  கலவையை  விட்டு  கிளறவும். 
  6. நன்கு  கெட்டியாகி 3/4கப் அளவாகி எண்ணை பிரிந்ததும்  இறக்கவும்.
  7. சுவையான காரசாரமான குழம்பு ரெடி.பச்சடி, பொரித்த அப்பளத்துடன் சாப்பிட சுவை கூடும்.
  8. சாதத்தில்  பிசைந்து  சாப்பிடவும்,  தயிர்  சாதத்துக்கு  தொட்டுக்  கொள்ளவும்  அருமையாக  இருக்கும்  இந்த   கறிவேப்பிலை குழம்பு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்