வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் கிரேவி ( நோ ஆனியன் நோ கார்லிக்)

Photo of Cabbage Gravy ( no onion no garlic) by Sowmya Sundar at BetterButter
608
1
0.0(0)
0

முட்டைகோஸ் கிரேவி ( நோ ஆனியன் நோ கார்லிக்)

Dec-07-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் கிரேவி ( நோ ஆனியன் நோ கார்லிக்) செய்முறை பற்றி

சப்பாத்தி, பூரி ,ரைஸ்க்கான சிம்பிள் கிரேவி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை கோஸ் 2 கப்
  2. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  3. சீரகம் 1 டீஸ்பூன்
  4. மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. சர்க்கரை 1/8 டீஸ்பூன்
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. அரைக்க:
  9. தக்காளி 2
  10. தேங்காய் துண்டு 1 டேபிள் ஸ்பூன்
  11. பச்சை மிளகாய் 2
  12. இஞ்சி 1 துண்டு
  13. பட்டை கிராம்பு தலா 2

வழிமுறைகள்

  1. கோஸை சிறிது பெரிய துண்டங்களாக நறுக்கி தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அரைத்த மசாலா ,உப்பு , சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின் அதனுடன் வேக வைத்த கோஸ் சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியானதும் மல்லிதழை சேர்த்து இறக்கவும்
  5. சிம்பிள் கோஸ் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்