வீடு / சமையல் குறிப்பு / பீஃப் பெப்பர் செமி கிரேவி

Photo of Beef Pepper semi gravy by Wahida Abdul Hameed at BetterButter
414
1
0.0(0)
0

பீஃப் பெப்பர் செமி கிரேவி

Dec-07-2018
Wahida Abdul Hameed
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீஃப் பெப்பர் செமி கிரேவி செய்முறை பற்றி

குறைந்த பொருட்களை வைத்து சுலபமாக ஒரு செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீஃப் ½ கலோ
  2. வெங்காயம் 3 நீளவாக்கில் அரிந்தது
  3. தயிர் 1 டேபிள்ஸ்பூன்
  4. மஞ்சள்தூள் ½ டீஸ்பூன்
  5. மிளகு சீரகத்தூள் 1 டேபிள்ஸ்பூன்
  6. தேங்காய் விழுது முந்திரி சேர்த்து அரைத்து 1 கப்
  7. பச்சை மிளகாய் 2 அல்லது 3
  8. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
  9. பட்டை ஒரு பெரிய துண்டு
  10. ஏலக்காய் 3
  11. கிராம்பு-3
  12. பிரியாணி இலை-1
  13. கருவேப்பிலை ஒரு கொத்து
  14. உப்பு ருசிக்கேற்ப
  15. எண்ணெய் / நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு வெங்காயம், சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது போட்டு தாளிக்கவும்.
  2. தாளித்தவுடன் மீதமிருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் டிரான்ஸ்பரன்ட் ஆகும் வரை வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சுத்தம் செய்த பீஃப் துண்டுகள் சேர்த்து லேசாக வதக்கி தயிர் மஞ்சள்தூள் மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து கூடவே சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 8 லிருந்து 9 விசில் விடவும் அல்லது கறி வேகும் வரை விடவும். சுவையான பீஃப் பெப்பர் செமி கிரேவி தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்