வீடு / சமையல் குறிப்பு / பருப்பு உருண்டை குருமா குழம்பு

Photo of Paruppu Urundai Kuruma by Jayasakthi Ekambaram at BetterButter
853
0
0.0(0)
0

பருப்பு உருண்டை குருமா குழம்பு

Dec-07-2018
Jayasakthi Ekambaram
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு உருண்டை குருமா குழம்பு செய்முறை பற்றி

ஆவியில் வேக வைத்த பருப்பு உருண்டை வைத்து செய்யும் குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப் பருப்பு 100 கிராம்
  2. துவரம் பருப்பு 50 கிராம்
  3. பச்சைமிளகாய்-2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  5. பட்டை ஒரு சிறிய துண்டு
  6. கிராம்பு-2
  7. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  8. கொத்தமல்லி 1கைப்பிடி அளவு
  9. கல் உப்பு ஒரு ஸ்பூன்
  10. தூள் உப்பு ஒரு ஸ்பூன்
  11. சோம்புத் தூள் ஒரு ஸ்பூன்
  12. தேங்காய் பேஸ்ட் 5 ஸ்பூன்
  13. குழம்பு மிளகாய் தூள் 4 ஸ்பூன்
  14. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  15. சமையல் எண்ணெய் 500ml
  16. வெங்காயம்-2
  17. தக்காளி-2

வழிமுறைகள்

  1. பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போடவும்
  2. அதனுடன் தூள் உப்பு பச்சை மிளகாய் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், அரை ஸ்பூன் சோம்பு தூள் சேர்த்து அரைக்கவும்
  3. அரைத்த பருப்பு மாவுடன் பொடியாக அரிந்த வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை சேர்க்கவும்
  4. எல்லாவற்றையும் நன்றாக கலந்து உருண்டைகளாக செய்து ஆவியில் வேக வைக்கவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து 4 ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்
  6. எண்ணெய் சூடானதும் பட்டை லவங்கம் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  7. பொடியாக நறுக்கிய தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
  8. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கல் உப்பு சேர்க்கவும்
  9. சிறிது நேரம் வதக்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
  10. பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து தேங்காய் பேஸ்ட் சேர்க்கவும்
  11. அடுப்பை ஆஃப் செய்த பிறகு ஆவியில் வெந்த உருண்டைகளை குழம்பில் சேர்க்கவும்
  12. இந்த உருண்டை குழம்பு சாதம் இட்லி தோசை பூரி சப்பாத்தி எல்லாவற்றுடனும் பொருத்தமாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்