வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் கிச்சடி

Photo of Raw mango kichadi by Krishnasamy Vidya Valli at BetterButter
368
0
0.0(0)
0

மாங்காய் கிச்சடி

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் கிச்சடி செய்முறை பற்றி

மாங்காயில் பச்சடி தானே செய்வார்கள்! அதென்ன கிச்சடி என்று கேட்பவர்களுக்கு ரெசிபி இதோ.அதிகம் பிரபலம் இல்லாத கிச்சடி வெரைட்டி இது. இளம் காய்கள் ஏதும் இல்லாத பொழுது அம்மா இதை செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் கால் கப்
  2. புளிக்காத தயிர் கால் கப்
  3. உப்பு கால் தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை சிறிது
  5. அப்படியே அரைக்க
  6. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  8. பச்சை மிளகாய் 1 (சிறியது)
  9. தாளிக்க
  10. தேங்காய் எண்ணை கால் தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
  13. மிளகாய்வற்றல் 1

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து மாங்காய்த் துண்டுகள் சேர்த்து வதக்கவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த விழுது வதக்கிய மாங்காய் (ஆறவைத்து) உப்பு தயிர் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. அப்படியே பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்