வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு பொரியல்

Photo of drumstick brinjal potato stir fry by Wahida Abdul Hameed at BetterButter
688
0
0.0(0)
0

முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு பொரியல்

Dec-10-2018
Wahida Abdul Hameed
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு பொரியல் செய்முறை பற்றி

முருங்கைக்காய் உருளைக்கிழங்கு கத்தரிக்காய் மற்றும் லேசாக தயிர் சேர்த்து செய்யக்கூடிய ஒரு சுவையான பொரியல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கைக்காய் 2
  2. கத்திரிக்காய் 2
  3. உருளைக்கிழங்கு 2
  4. வெங்காயம்-1
  5. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் ½ டீஸ்பூன்
  7. பச்சை மிளகாய் 3
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. சீரகம் 1 ஸ்பூன்
  10. உளுந்து 1 ஸ்பூன்
  11. உப்பு ருசிக்கேற்ப
  12. காய்ந்த மிளகாய் 1
  13. கருவேப்பிலை சிறிதளவு
  14. தேங்காய் துருவல் ½ கப்
  15. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கத்திரிக்காய், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  3. இதனுடன் வெங்காயம் சேர்த்து, வெங்காயம் டிரான்ஸ்பரன்ட் ஆகும் வரை வதக்கி, கூடவே நறுக்கிய உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முருங்கைக்காய் போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
  4. காய்கள் வெந்ததும் அதில் தயிர் சேர்த்து லேசாக கிளறி, இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்தால் சுவையான கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்